YZF - R3 பைக்குகளை இந்தியாவில் திரும்பப் பெறுகிறது யமஹா

யமஹா நிறுவனம் YSF - R3 பைக்குகளை இந்தியாவில் திரும்பப் பெறப்போவதாக அறிவித்திருக்கிறது. அந்த வகையில் மொத்தம் 1,874 பைக்குகள் திரும்பப் பெறப்பட உள்ளன

View Photos
புகார்கள் வராத நிலையில் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது யமஹா

யமஹா நிறுவனம் YSF - R3 பைக்குகளை இந்தியாவில் திரும்பப் பெறப்போவதாக அறிவித்திருக்கிறது. அந்த வகையில் மொத்தம் 1,874 பைக்குகள் திரும்பப் பெறப்பட உள்ளன. 

'ரேடியேட்டர் ஹோஸ்' மற்றும் 'ஸ்பிரிங் டார்சன்' ஆகியவற்றில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதுதொடர்பாக புகார்கள் ஏதும் இதுவரை வந்ததில்லை. இருப்பினும் தானே முன்வந்து யமஹா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. திரும்பப் பெறப்படும் பைக்குகளில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மாற்றித் தரப்பட உள்ளன. 

2018 yamaha yzf r3

321 சிசி, லிக்விட் கூல்டு, பேரலல்  ட்வின் எஞ்சின் 10,750 ஆர்.பி.எம். திறனை வெளிப்படுத்துகிறது.

ரேடியேட்டர் ஹோஸ் மற்றும் ஸ்பிரிங் டார்சன் ஆகியவற்றில்  பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பைக்குகள் கடந்த 2015-ல் இருந்து 2018-ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்டவை. இந்த கோளாறை செய்வதற்கு பணம் செலுத்த தேவையில்லை. 

0 Comments

2018 yamaha yzf r3

அந்த வகையில் நீங்கள் 2015-ல் இருந்து 2018 வரை யமஹா YSF - R3 பைக்கை வாங்கியிருந்தால் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இந்த பைக்கின் விலை ரூ. 3.48 லட்சம். 321 சிசி, லிக்விட் கூல்டு, பேரலல்  ட்வின் எஞ்சின் 10,750 ஆர்.பி.எம். திறனை வெளிப்படுத்துகிறது. ஆர் 3 பைக்குகள் இரட்டை சேனல் ஏ.பி.எஸ். பிரேக்கிங் சிஸ்டத்துடன் வெளி வருகின்றன.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.