வோக்ஸ்வாகன் இந்தியா (Volkswagen India) தனது வருடாந்திர பண்டிகை திருவிழாவான வோக்ஸ்ஃபெஸ்ட் 2019 (Volksfest 2019) அறிமுகம் செய்துள்ளது. இதன் கீழ் போலோ, வென்டோ மற்றும் அமியோ ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளில் பல கூடுதல் சலுகைகள் மற்றும் தள்ளுபடியை அறிமுகப்படுத்துகிறது. அக்டோபர் 31, 2019 வரை 102 நகரங்களில் உள்ள வோக்ஸ்வாகன் உற்பத்தியாளர்களின் 132 விற்பனை நிலையங்களில் 1.8 லட்சம் ரூபாய் வரையான தள்ளுபடி திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வோக்ஸ்ஃபெஸ்ட் 2019 குறித்து வோக்ஸ்வாகன் பயணிகள் கார்களின் இயக்குனர் ஸ்டெஃபென் நாப் கூறுகையில், "வோக்ஸ்ஃபெஸ்ட் 2019 என்பது எங்கள் வாடிக்கையாளர்களுடன் பண்டிகை உணர்வை கொண்டாட உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான திட்டம் வழங்குவதன் மூலம் எங்கள் அளவுகோலை அதிகரிக்கிறோம். கொள்முதல், விற்பனைக்குப் பின் முயற்சிகள் மற்றும் கவர்ச்சிகரமான நிதி விருப்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான மதிப்பு அடிப்படையிலான முன்மொழிவு இது. கூடுதலாக, வாடிக்கையாளர்களுக்கு மினியேச்சர் வோக்ஸ்வாகன் மாடல்களை வழங்க வோக்ஸ்வாகன் மேட்டல் இந்தியாவின் ஹாட் வீல்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது" என்றார்.

GT Line மாடல்களுக்கு இந்த தள்ளுபடி கிடையாது
வோக்ஸ்வாகன் போலோ, வென்டோ மற்றும் அமியோ முழுவதும் உள்ள நன்மைகள் தள்ளுபடிகள், பரிமாற்ற போனஸ், நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் சாலையோர உதவி (ஆர்எஸ்ஏ) ஆகியவை அடங்கும். இந்த ஆண்டு ஜனவரி முதல் தனது பெட்ரோல் கார்களில் நான்கு ஆண்டும் டீசல் கார்கள் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் ஐந்தாண்டு உத்தரவாதத்தை வோக்ஸ்வாகன் வழங்குகிறது. வோக்ஸ்ஃபெஸ்ட்டின் கீழ், வாடிக்கையாளர்கள் வென்டோ ஹைலைன் டீசலில் மட்டுமே அதிகபட்சமாக 1.8 லட்சம் ரூபாய் நன்மைகளைப் பெற முடியும். கூடுதலாக, அனைத்து அமியோ வகைகளுக்கும் 20,000 ரூபாய் போனஸ் கிடைக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் ஏற்கனவே வென்டோ ஹைலைன் பிளஸ் டி.எஸ்.ஜி வேரியண்ட்டில் சுமார் 1.5 லட்சம் ரூபாய் தள்ளுபடியை வழங்கி வருகின்றனர், அதே நேரத்தில் வோக்ஸ்வாகன் அமியோ டி.எஸ்.ஜி ஹைலைன் பிளஸ் பதிப்பில் 1.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி உள்ளது. இதற்கிடையில், சில டீலர்ஷிப்கள் வோக்ஸ்வாகன் போலோவில் 80,000 ரூபாய் வரை தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் 20,000 ரூபாய் வழங்குகின்றன. பாஸாட், டிகுவான் மற்றும் புதிய ஜிடி லைன் மாடல்களுக்கு தள்ளுபடிகள் கிடையாது.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.