ஜூலை மாதம் வெளியாக இருக்கும் பைக்குகள்

முன்னதாகவே விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கபப்ட்ட 3 பைக்குகள் தாமதமாகி, இந்த மாதம் வெளி வர இருக்கின்றன.

View Photos

இந்த ஜூலை மாதம் வரிசையாக பல பைக்குகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. முன்னதாகவே விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட 3 பைக்குகள் தாமதமாகி, இந்த மாதம் வெளி வர இருக்கின்றன.

1. பி.எம்.டபிள்யூ ஜி 310 ஆர்

bmw g310r

 

மூன்று ஆண்டுகளுக்கு முன் டி.வி.எஸ் - பி.எம்.டபிள்யூ நிறுவனங்கள் இணைந்து இந்த பைக்கை அறிமுகப்படுத்தினர். பி.எம்.டபிள்யூ தயாரிப்புகுகளில் இது தான் குறைந்த விலை பைக். ஹோசூர் டி.வி.எஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. 313 சிசி, ஒரு சிலிண்டர் லிக்விட் கூல் என்ஜின் கொண்டது. 34 பி.எச்.பி, 28 என்.எம் டார்க்கும் கொடுக்கிறது இந்த பைக். 6 கியர்களும், ஏ.பி.எஸ் வசதியும் கொண்டிருக்கிறது இந்த பைக். ஜூலை 18-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. புக்கிங் இப்போதே தொடங்கி விட்டது.

வெளியாகும் நாள்: ஜூலை 18, 2018

எதிர்பார்க்கப்படும் விலை: 2.5 லட்சம் - 3 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம் விலை)

2. பி.எம்.டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்

bmw g 310 gs

 

ஜி 310 ஆர் பைக்குடன் இந்த பைக்கும் விற்பனைக்கு வருகிறது. ஸ்டிரீட் ஃபைட்டர் மாடலில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலை தூர சாகசப் பயணங்களுக்கு இந்த பைக் ஏற்றதாக இருக்கும். என்ஜினை பொருத்தவரை,  310 ஆர் பைக்கில் உள்ளே அதே 313 சிசி என்ஜின் தான். 

வெளியாகும் நாள்: ஜூலை 18, 2018

எதிர்பார்க்கப்படும் விலை: 3 லட்சம் - 3.5 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம் விலை)

3. ஹீரோ எக்ஸ்டிரீம் 200 ஆர்

hero xtreme 200r first ride

 

ஹீரோ நிறுவனம் பிரீமியம் செக்மென்ட்டில் எக்ஸ்டிரீம் 200 ஆர் பைக்கோடு மீண்டும் அடியெடுத்து வருகிறது. 200 சிசி ஏர் கூல் என்ஜின் கொண்டிருக்கும் இந்த பைக் 18.1 பி.எச்.பி பவரும்,  17.1 என்.எம் டார்க்கும் கொடுக்கிறது. பவர்ஃபுல்லான பைக்காக இது இல்லாவிட்டாலும், ஏ.பி.எஸ், எல்.இ.டி டெயில் லைட், 8 ஸ்டெப் மோனோஷாக் ஆகியவை கூடுதல் சிறப்பு சேர்க்கின்றன.

வெளியாகும் நாள்: இன்னும் அறிவிக்கப்படவில்லை

எதிர்பார்க்கப்படும் விலை: 85,000 - 90,000 ரூபாய் (எக்ஸ் ஷோரூம் விலை)

4. சுசூக்கி பர்க்மேன் ஸ்டிரீட் 125:

suzuki burgman street 125

 

125 சிசி ஸ்கூட்டர் செக்மென்டில் இந்த ஆண்டு பல வெளியீடுகள் இருந்தன. அவற்றோடு சுசூக்கி பர்க்மேன் ஸ்டிரீட் 125 ஸ்கூட்டரும் விற்பனைக்கு வருகிறது. முன் பகுதியில் நல்ல இட வசதி இருக்கிறது. விண்ட் ஷில்டு, அலாய் வீல்ஸும் உள்ளது. இதோடு, எல்.இ.டி ஹெட்லைட்டும், 12வோல்ட் சார்ஜரும் உள்ளது. டி.வி.எஸ் என் டார்க் 125, ஹோண்டா கிரேசியா, ஏப்ரில்லா எஸ்.ஆர் 125 ஆகிய பைக்குகளுடன் பர்க்மேன் போட்டியிட உள்ளது.

வெளியாகும் நாள்: ஜூலை 19, 2018

0 Comments

எதிர்பார்க்கப்படும் விலை: 65,000 ரூபாய் (எக்ஸ் ஷோரூம் விலை)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare BMW G 310 R with Immediate Rivals