மே மாதம் பஜாஜ் நிறுவனத்திற்கு எப்படி இருந்தது..?- ஓர் அலசல்

ஏற்றுமதியில் 26 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது பஜாஜ்.

View Photos
பஜாஜ் நிறுவனத்தின் பைக்குகள் ஏற்றுமதி ஆறு சதவிகிதம் உயர்ந்துள்ளது

இந்தியாவின் டாப் பைக் நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் பைக் நிறுவனம் மே மாதம் 2019 யில் 3,65,068 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. மே 2018 யில் விற்பனையான பைக்குகளின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது இது கூடுதலாகும். மே 2018 யில் 3,42,195 பஜாஜ் பைக்குகள் விற்றது குறிப்பிடத்தக்கது.

மே 2019 யில் பஜாஜ் நிறுவனத்தின் பைக்குகள் ஏற்றுமதி ஆறு சதவிகிதம் உயர்ந்துள்ளது. மே 2018 யில் 1,50,052 பைக்குகளையும் மே 2019 யில் 1,59,347 பைக்குகளையும் ஏற்றுமதி செய்தது பஜாஜ் நிறுவனம்.

கமர்சியல் வாகனங்களில் மே 2019 யில் 30,103 வாகனங்களை விற்பனை செய்தது பஜாஜ். மே 2018 யில் ஒப்பிடும் போது இது 6 சதவிகிதம் குறைவாகும். மே 2018 யில் 32,082 கமர்சியல் வாகனங்களை பஜாஜ் விற்றது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதியில் 26 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது பஜாஜ். மே 2018 யில் 32,367 வாகனங்களையும் மே 2019 யில் 24,064 வாகனங்களையும் பஜாஜ் நிறுவனம் ஏற்றுமதி செய்தது.

0 Comments

பஜாஜ் நிறுவனம், இந்தியாவில் 2,35,824 பைக் மற்றும் கமர்சியல் வாகனங்களை விற்றது. மே 2018 யை ஒப்பிடும் போது இது ஐந்து சதவிகிதம் உயர்வாகும். மே 2018 யில் 2,24,625 பைக் மற்றும் கமர்சியல் வாகனங்களை விற்றது பஜாஜ் குறிப்பிடத்தக்கது.   

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.