வந்துவிட்டது புதிய டிவிஎஸ் அப்பாச்சி பைக்...விவரங்கள் உள்ளே..!!!!

இந்தியாவில் 125+ சிசி பைக்குகளுக்கு ஏபிஎஸ் கட்டாயம் என்ற சட்டம் அமலுக்கு வரவுள்ளது

View Photos

டிவிஎஸ் நிறுவனத்தின் சிறந்த பைக்குகளில் ஒன்று டிவிஎஸ் அப்பாச்சி ஆகும். இந்நிலையில், அப்பாச்சி பைக் ஏபிஎஸ் வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி ஏபிஎஸ் பைக்கின் விலை ரூ. 98,644 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு பல மாற்றங்கள் உடன் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த பைக்கில் இருந்த அதே மெக்கானிக்கல் விஷயங்கள் தான் இந்த புது பைக்கிலும் உள்ளது. 159 சிசி சிங்கிள்-சிலிண்டர், நான்கு வால்வ், ஆயில் கூல்ட் இன்ஜின் பெற்றுள்ள இந்த பைக், ஐந்து கியர் வசதியுடன் 16.6 bhp மற்றும் 14.8 Nm டார்க் பெற்றுள்ளது.

 

tvs apache rtr 160 4v first ride

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி ஏபிஎஸ் பைக்கின் விலை ரூ. 98,644 .

இந்தியாவில் 125+ சிசி பைக்குகளுக்கு ஏபிஎஸ் கட்டாயம் என்ற சட்டம் அமலுக்கு வரவுள்ளது. அதனால் டிவிஎஸ் 160 சிசி பைக்கான அப்பாச்சியில் ஏபிஎஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

0 Comments

இந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி ஏபிஎஸ் பைக்கானது ஹோண்டா ஹார்னட், பஜாஜ் பல்சர் என்எஸ்160, சூசுகி ஜிக்சர் முதலிய பைக்குகளுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்துள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.