2019-ம் ஆண்டில் டிரைம்ப் நிறுவனத்தின் இலக்கு..!

ஸ்பீட் டுவின் பைக்கை தொடர்ந்து டிரைம்ப் பைக்கின் அடுத்த தயாரிப்பு டிரைம்ப் ஸ்கிராம்பிலர் 1200

View Photos
டிரைம்ப் நிறுவனத்தின் அடுத்த பைக், ஸ்பீட் டுவின் ஆகும்

Highlights

  • டிரைம்ப் நிறுவனத்தின் அடுத்த பைக் - ஸ்பீட் டுவின் ஆகும்
  • ஸ்பீட் டுவின் தொடர்ந்து ஸ்கிராம்பிலர் பைக்கை அறிமுகம் செய்கிறது டிரைம்ப்
  • டிரைம்ப் டைகர் பிரிவில் இர்ண்டு பைக்குகளை அறிமுகம் செய்யலாம் டிரைம்ப்

டிரைம்ப் நிறுவனத்தின் பைக்குகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. 2019 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் டிரைம்ப் ஸ்பீட் டுவின் பைக் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன் பின் ஸ்கிராம்பிலர் 1200 விற்பனைக்கு வரும். அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பைக்குகளை அறிமுகம் செய்யஉள்ளது டிரைம்ப்.

cv7ije14

ஸ்பீட் டுவின் பைக்கின் எடை 7 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது

‘எங்கள் நிறுவனத்திற்கு அடுத்த சில மாதங்கள் மிக முக்கியமானது. அடுத்த 2-3 மாதங்களில் மாதம் ஒரு பைக் என அறிமுகம் செய்யவுள்ளோம். அடுத்தாக ஸ்பீட் டுவின் விற்பனைக்கு வர இருக்கிறது' என டிரைம்ப் மோட்டர்சைக்கிள் இந்தியாவின் மேலாளர் ஃபரூக் தெரிவித்தார்.

ஸ்பீட் டுவின் பைக், 6750 rpm-இல்  96 bhp பவரையும் 112 Nm உட்ச டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் மெக்னிச்சியம் காம் கவர் உள்ளது. ட்ரக்ஸ்டன் பைக்கை விட ஸ்பீட் டுவின் பைக்கின் எடை குறைவானதே. ட்ரக்ஸ்டனை விட சுமார் 7 கிலோ எடை குறைவானது இந்த ஸ்பீட் டுவின் பைக்.

14le6nqs

ஸ்பீட் டுவின் பைக்கை தொடர்ந்து ஸ்கிராம்பிலர் பைக்கை அறிமுகம் செய்யவுள்ளது டிரைம்ப்

ஸ்பீட் டுவின் பைக்கை தொடர்ந்து டிரைம்ப் பைக்கின் அடுத்த தயாரிப்பு டிரைம்ப் ஸ்கிராம்பிலர் 1200. அதனைத் தொடர்ந்து டிரைம்ப் பைக்கின் டைகர் பைக்குகளில் இரண்டு பைக்குகளை அறிமுகம் செய்யவுள்ளது டிரைம்ப்.

0 Comments

ஆக மொத்தமாக இந்த ஆண்டு 4 பைக்குகளை அறிமுகம் செய்ய டிரைம்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.