பைக்குகளை திரும்பி பெறும் பிரபல வாகன நிறுவனம்!

பிரச்னை இருக்கும் பைக்குகளுக்கு இலவசமாக புது கிளட்ச் கேபிளை டிரைம்ப் நிறுவன டீலர்கள் செய்து தருவார்கள்

View Photos
டிரைம்ப் நிறுவனம் பிரச்னையை இலவசமாக சரி செய்கிறது

Highlights

  • உலகம் முழுவதும் டிரைம்ப் பைக்குகளில் இந்த பிரச்சனை உள்ளது
  • இந்த பைக்குகள் 2016 - 2019 வரை தயாரிக்கப்பட்டது
  • உலகம் முழுவதும் 12,000 பைக்குகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது

பிரபல பைக் நிறுவனமான டிரைம்ப், இந்தியாவில் இருந்து 1000 பைக்குகளை திரும்பி பெறுகிறது. தான் தயாரித்த 100 பைக்குகளில் கிளட்ச் கேபிள், வயரிங் உடன் உறசுவதால், எலக்ட்ரிக் பவரில் பிரச்னை ஏற்படுவதாகவும் அதனை சரிகட்டவே வாகனங்கள் திரும்ப பெறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது டிரைம்ப்.

இந்த பிரச்னை இருக்கும் பைக்குகளுக்கு இலவசமாக புது கிளட்ச் கேபிளை டிரைம்ப் நிறுவன டீலர்கள் செய்து தருவார்கள். டிரைம்ப் நிறுவனத்தின் ஸ்டிரிட் டிவின், போனோவைல் டி100, போனோவைல் டி120, ஸ்டிரிட் ஸ்கிராம்பிலர் ஆகிய பைக்குகளில் இந்த கிளட்ச் பிரச்னை உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இவை 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டவை.

பைக்

triumph bonneville t120

டிரைம்ப் போனோவைல் டி 120யும் இதில் அடங்கும்

உலகம் முழுவதும் டிரைம்ப் நிறுவனத்தின் பிரபலமான பைக், டிரைம்ப் போனோவைல் ஆகும். இந்த கிளட்ச் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பைக்குகள் 2016-2019 வரை தயாரிக்கப்பட்ட டிரைம்ப் போனோவைல் டி120, போனோவைல் டி120 கருப்பு, 2017-2019 வரை தயாரிக்கப்பட்ட போனோவைல் டி100, டி100 கருப்பு, 2017-2018 வரை தயாரிக்கப்பட்ட ஸ்டிரிட் கப், ஸ்டிரிட் ஸ்கிராம்பிலர் மற்றும் 2016-2018 வரை தயாரிக்கப்பட்ட ஸ்டிரிட் டிவின் பைக்குகள் உள்ளிட்டவை ஆகும்.

0 Comments

டிரைம்ப் மோட்டர்சைக்கிள் இந்தியா இது குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. ‘பாதுகாப்பு அம்சங்களை மனதில் வைத்து குறிப்பிட்ட ஸ்டிரிட் டிவின், போனோவைல் டி100, போனோவைல் டி120, ஸ்டிரிட் ஸ்கிராம்பிலர் ஆகிய பைக்குகளில் கிளட்ச் பிரச்னைகள் உள்ளதால், அது பவரை குறைக்கும். இதனால் உலகம் முழுவதும் இருந்து சில டிரைம்ப் பைக்குகள் திரும்பி பெறப்படுகிறது. அதில் இந்தியாவில் இருந்து 1000 பைக்குகளும் அடங்கும். டிரைம்ப் டீலர்ஷிப்களை வாடிக்கையாளர்கள் தொடர்ப்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Triumph Rocket 3 R with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.