'வீட்டுக்கே வந்து சர்வீஸ்..!- டொயோட்டாவின் வேற லெவல் திட்டம்

இந்த ‘சர்வீஸ் எக்ஸ்ப்ரஸ்’ திட்டத்தை ராஜஸ்தானில் செயல்படுத்தியுள்ளது டொயோட்டா.

View Photos
இந்த 'சர்வீஸ் எக்ஸ்பிரஸ்' கிராமங்களில் செயல்படும்

Highlights

  • கிராமங்களை குறிவைத்தே இந்த சர்வீஸ் எக்ஸ்ப்ரஸ் துவங்கப்பட்டுள்ளது
  • ராஜஸ்தானில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • பல மாநிலங்களில் இதனை அறிமுகம் செய்யவுள்ளது டொயோட்டா

சிறு நகரங்கள், கிராமங்களில் வசிப்பவர்கள் தங்களது கார்களை சர்வீஸ் செய்ய வெகுதூரம் செல்ல வேண்டியதுள்ளது. இதனை சரி செய்யும் விதமாக டொயோட்டா ஒரு புத்தம் புதிய திட்டம் வகுத்துள்ளது.

‘சர்வீஸ் எக்ஸ்பிரஸ்' என்னும் புதிய சேவையை டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் கார் சர்வீஸை டொயோட்டா நிறுவனம் செய்து தரவுள்ளது.

இது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டரின் துணை இயக்குநர் ராஜா கூறுகையில், ‘கார் சர்வீஸ் செய்ய வெகு தூரம் செல்ல வேண்டியதுள்ளதாக எங்கள் வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். அதனை சரி செய்யும் விதமாக சர்வீஸ் எக்ஸ்பிரஸ் என்னும் திட்டத்தை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பல வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று சர்வீஸ் செய்ய முடியும் என நாங்கள் நம்புகிறோம்' என்றார்.

0 Comments

இந்த ‘சர்வீஸ் எக்ஸ்பிரஸ்' திட்டத்தை ராஜஸ்தானில் செயல்படுத்தியுள்ளது டொயோட்டா. அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் மேலும் பல மாநிலங்களுக்கு இதை விரிவுபடுத்த டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.