ஹூண்டாய் நிறுவனத்தின் புது கிரிட்டா கார் இந்தியாவில் அறிமுகம்...!

இந்தியாவில் ஆகஸ்ட் 22,2019 யில் கியா செல்டோஸ் அறிமுகமாக உள்ளது. அதற்கு முன்பாக இந்த ஹூண்டாய் கிரிட்டா ஸ்போர்ட்ஸ் காரை ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது

View Photos
இதில் சில அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன

தற்போது இந்தியாவில் அதிக மவுசு இருக்கும் கார் பிரிவு SUV ஆகும். பல லார் நிறுவனங்கள் இந்த பிரிவில் சிறந்து விளங்க பல மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த மாதிரி ஹூண்டாய் நிறுவனமானது தங்களது புது காரான ஹூண்டாய் கிரிட்டா ஸ்போர்ட்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

அப்டேட் மாடலான இதில் பல மாற்றங்கள் உள்ளன. பெட்ரோல் வகை 12.78 லட்சம் ரூபாயாகவும் டீசல் வகை 14.13 லட்சம் ரூபாயாகவும் விலை நிர்ணைக்கப்பட்டுள்ளது.

d96oba98

இந்த புது கிரிட்டா ஸ்போர்ட்ஸ் கார் SUV பிரிவில் வரும்

மானுவல் வகையில் மட்டுமே வரும் இந்த காரில் 1.6 லிட்டர் இன்ஜின் உள்ளது. இந்த கார் இரண்டு வண்ணங்களில் வருகிறது. கிரிட்டா ஸ்போர்ட்ஸ் காரில் அப்டேட்களாக கிரில்லுக்கு டார்க் கிரோம், சில்வர் ரூப் ரெயில்ஸ், புரோஜெக்டர் ஹெட்லாம்ப் முதலியவை வருகின்றன. கருப்பு நிற ப்ராபிக் சீட்கள், எலக்ட்ரிக் சன்ரூப், 7 இன்ச் தொடுதிரை, வயர்லெஸ் சார்ஜிங், இரண்டு ஏர்பேக், ஏபிஎஸ் முதலியவை உள்ளன.

இந்தியாவில் ஆகஸ்ட் 22,2019 யில் கியா செல்டோஸ் அறிமுகமாக உள்ளது. அதற்கு முன்பாக இந்த ஹூண்டாய் கிரிட்டா ஸ்போர்ட்ஸ் காரை ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. டாடா மோட்டர்ஸ் நிறுவனம் இந்த மாதம் இறுதிக்குள் கருப்பு நிற ஹாரியரை அறிமுகம் செய்யவுள்ளது.

0 Comments

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.