இலவச சூப்பர்சார்ஜரை மறுபடியும் அறிமுகம் செய்த டெஸ்லா...!

தற்போது அமெரிக்காவில் உள்ளவர்கள் தங்களது டெஸ்லா காரில் சூப்பர்சார்ஜரை உபயோகிக்க வேண்டும் என்றால் அவர்கள் ஒரு kWh க்கு 0.28 டாலர் வழங்க வேண்டும்

View Photos
மாடல் S, மாடல் X உரிமையாளர்கள் இலவசமாக சூப்பர்சார்ஜரை உபயோகிக்கலாம்

Highlights

  • மாடல் S காருக்கு முழுமையான சார்ஜ் ஏற்ற வேண்டும் என்றால், 19.5 டாலர் ஆகும்
  • டெஸ்லா நிறுவனம் இந்த சூப்பர்சார்ஜை மறுபடியும் இலவசமாக வழங்கவுள்ளது
  • மாடல் 3 உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்

எலக்ட்ரிக் கார் வைத்திருப்பவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை என்னவென்றால், சார்ஜ் செய்யும் நேரம் மற்றும் சார்ஜ் எவ்வளவு நேரம் இருக்கும் என்பது தான். எலக்ட்ரிக் கார்களின் முன்னோடியான டெஸ்லா நிறுவனம், துவக்கத்தில் சூப்பர்சார்ஜரை இலவசமாக வழங்கியது.

இந்த சூப்பர்சார்ஜ் மூலம் 85 kWh பேட்டரி கொண்ட டெஸ்லா S மாடல் கார் 50 சதவிகிதம் சார்ஜ் ஆக 20 நிமிடங்களும் 80 சதவிகிதம் சார்ஜ் ஆக 40 நிமிடங்களும் 100 சதவிகிதம் சார்ஜ் ஆக 70 நிமிடங்களும் எடுத்து கொள்ளும். முதலில் இலவசமாக சூப்பர்சார்ஜ் வழங்கி வந்த டெஸ்லா நிறுவனம் அதன் பின் கட்டணம் வசூலிக்க துவங்கியது.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் இந்த சூப்பர்சார்ஜை மறுபடியும் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. இதனை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் உள்ளவர்கள் தங்களது டெஸ்லா காரில் சூப்பர்சார்ஜரை உபயோகிக்க வேண்டும் என்றால் அவர்கள் ஒரு kWh க்கு 0.28 டாலர் வழங்க வேண்டும். ஒரு நிமிட சார்ஜ்க்கு 0.13 டாலர் முதல் 0.26 டாலர் வரை செலுத்த வேண்டும். ஒரு டெஸ்லா மாடல் S காருக்கு முழுமையான சார்ஜ் ஏற்ற வேண்டும் என்றால், 19.5 டாலர் (1300 இந்திய ரூபாய்) செலவாகும்.

tesla model x 827

மாடல் X யில் சமீபத்தில் மெக்கானிக்கல் அப்டேட்கள் செய்யப்பட்டது

0 Comments

இனி மாடல் S, மாடல் X உரிமையாளர்கள் இலவசமாக சூப்பர்சார்ஜரை உபயோகிக்கலாம். மாடல் 3 உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது மாடல் S, மாடல் X கார்களில் மெக்கானிக்கல் அப்டேட் செய்யப்பட்டது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.