அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லா நிறுவனத்தின் அடுத்த வாகன அறிவிப்பு..!

தற்சமயம் 145 கிலோவாட் ஆக இருக்கும் டெஸ்லாவின் சூப்பர் சார்ஜர், மார்ச் 6 ஆம் தேதி முதல் 350 கிலோவாட் ஆக உயர்த்தப்படுகிறது

View Photos
மார்ச் மாதம் டெஸ்லாவின் மாடல் Y அறிமுகம் ஆகிறது

Highlights

  • எலான் மஸ்க் இது குறித்து ட்விட் செய்திருந்தார்
  • மாடல் Y கார், மார்ச் 14, 2019 –யில் அறிமுக்ம செய்யப்படவுள்ளது
  • மாடல் Y, 40,000 டாலர் (28.35 லட்சம் ரூபாய்) மதிப்பில் இருக்கல

டெஸ்லா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'மாடல் Y' எலக்ட்ரிக் கார் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனை டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தன் ட்விட்கள் மூலம் உறுதி செய்தார்.

டெஸ்லா நிறுவனத்தின் ஐந்தாவது காரான இந்த மாடல் Y, மாடல் 3 காரை விட 10 சதவிகிதம் பெரியதாகவும் 10 சதவிகிதம் விலை உயர்ந்ததாகவும் இருக்கும்.

மாடல் 3 இருக்கும் டிசைன்கள் 75 சதவிகிதம் இந்த மாடல் Y-யிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் Y கார், மார்ச் 14, 2019 –இல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அமெரிக்காவின் நெவேடாவில் இருக்கும் டெஸ்லா ஜிக்கா தொழிற்சாலையிலும் சீனாவின் சாங்காய் தொழிற்சாலையிலும் இந்த கார் தயாரிக்கப்படவுள்ளது.

tesla model y teaser

மாடல் 3 காரில் இருக்கும் டிசைன்களில் பெரும்பான்மையனவை மாடல் Y-யிலும் இருக்கும்

மாடல் 3 மற்றும் மாடல் எஸ் கார்களின் மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டுள்ளதால், அந்த கார்களின் அதிகபட்ச வேகம், மணிக்கு 261 கிலோ மீட்டர் இருக்கும் எனப்படுகிறது.

தற்சமயம் 145 கிலோவாட் ஆக இருக்கும் டெஸ்லாவின் சூப்பர் சார்ஜர், மார்ச் 6 ஆம் தேதி முதல் 350 கிலோவாட் ஆக உயர்த்தப்படுகிறது. இதற்காக சூப்பர்சார்ஜ் 3.0 அறிமுகம் செய்யப்படுகிறது.

0 Comments

ஐந்து சீட்கள் இருக்கும் என எண்ணப்படும் மாடல் Y, 40,000 டாலர் (28.35 லட்சம் ரூபாய்) மதிப்பில் இருக்கலாம். இந்தியாவில் இன்னும் டெஸ்லா தன் கார்களை அறிமுகம் செய்யவில்லை. எனவே மாடல் Y இந்தியா சாலைகளுக்கு வர சில காலங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.