Tesla: விற்பனையில் புதிய சாதனையை படைத்த டெஸ்லா

டெஸ்லா நிறுவனமானது ஒவ்வொரு காலாண்டிலும் ஒவ்வொரு சாதனையை படைத்து வருகிறது.

View Photos
Tesla: 1,00,000 கார்களை விற்க குறிக்கோள் வைத்திருந்தது டெஸ்லா

ஆட்டோமொபைல் துறையில் மாபெரும் புரட்சியை செய்து வருகிறது டெஸ்லா (Tesla) நிறுவனம். எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறூவனமான டெஸ்லா உலகம் முழுவதும் தங்களது வாகனங்களை விற்று வருகிறது. சமீபத்தில் சீனாவில் தங்களது தயாரிப்பு ஆலையை துவங்க ஒப்பந்தம் செய்தது டெஸ்லா நிறுவனம்.

2019 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 97,000 கார்களை விற்றது டெஸ்லா. அந்த நிறுவனத்தின் புது சாதனை இதுவாகும். டெஸ்லா நிறுவனம் 1,00,000 கார்களை விற்பதையே குறிக்கோளாக வைத்திருந்தது. ஏற்கனவே கடைசி காலாண்டில் 95,200 கார்களை விற்றது டெஸ்லா நிறுவனம்.

இதனை குறித்து டெஸ்லா நிறுவனம் கூறுகையில், ‘3வது காலாண்டில் புதிய சாதனை படைத்துள்ளோம். 4வது காலாண்டில் ஏற்கனவே பல ஆர்டர்கள் உள்ளன. எங்களது மாடல் 3 காரானது நல்ல வரவேற்பை பெற்றது. அதில் பல விற்பனையானது முனொஅதிவு இல்லாமல் ஆர்கானிக் முறையில் விற்பனை செய்யப்பட்டது' என்றது.

முன்னதாக மஸ்க், தனது நிறுவன தொழிலாளர்களுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பியிருந்தார். அதில், ‘நமது நிறுவனம் ஒரு காலாண்டில் 1,00,000 கார்களை விற்க வாய்ப்புள்ளது. இது நிறைவேறினால் டெஸ்லா வரலாற்றில் ஓர் மைல்கல் ஆகும்' என கூறப்பட்டிருந்து.

டெஸ்லா கார்களின் ஆட்டோபைலட் டிரைவர் உதவி சிஸ்டத்திற்கு வலுசேர்க்க கலிபோர்னியாவின் Deepscale என்னும் நிறுவனத்தை வாங்குகிறது டெஸ்லா.

0 Comments

உலகம் முழுவதும் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வீழ்ச்சியை பதிவு செய்து கொண்டிருக்கும் நேரத்தில் டெஸ்லா நிறுவனமானது ஒவ்வொரு காலாண்டிலும் ஒவ்வொரு சாதனையை படைத்து வருகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.