Tata Tiago Wizz: இந்தியாவில் அறிமுகமான புது டாடா மோட்டர்ஸ் கார்

இந்தியாவில் இது பண்டிகை காலம் என்பதால் இந்த கால விற்பனையையே பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நம்பியுள்ளனர்.

View Photos
Tata Motors: இதுவரை 2.5 லட்சம் டியாகோ கார் விற்பனையாகியுள்ளது

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் லிமிடெட் பதிப்பான டியாகோ விஸ்ஸை (Tiago Wizz) அறிமுகப்படுத்தியுள்ளது, இது தியாகோ கீழ் வரும் பிரீமியம் (Premium) பதிப்பாகும். தியாகோ விஸ் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜினுடன் வரும். இதன் விலை 5.40 லட்சம் ரூபாயாகும் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). இந்த புது மாடல் டைட்டானியம் வண்ணத்துடன் வருகிறது. மேலும் இதன் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திற்கு 10 புதிய சிறப்பு அம்சங்களுடன் வருகிறது.

teufuomg

Tiago Wizz: இதன் வெளிப்புறத்தில் 5 மாற்றங்கள் உள்ளன

வெளிப்புறத்தில் தியாகோ விஸ் காரானது கருப்பு நிற மாறுபட்ட ரூப், ஆரஞ்சு கிரில், ஆரஞ்சு நிறம் கொண்ட சக்கரங்கள், ஆரஞ்சு ORVM கள் மற்றும் 'விஸ்'  பேட்ஜுடன் வருகிறது. உட்புறத்திலும் சில மாற்றங்கள் உள்ளன. ஆரஞ்சு நிற டெகோ-ஸ்டிச் (Stitch), கிரானைட் கருப்பு உள் கதவு கைப்பிடி, டைட்டானியம் க்ரே நிற கியர் ஷிப்ட், டைட்டானியம் க்ரே ஏர் வென்ட், ஆரஞ்சு நிற சென்டர் ஏர் வென்ட் ரிங் உள்ளது.

huiufnso

Tata Tiago Wizz: இந்த காரின் உட்புறத்திலும் மாற்றங்கள் உள்ளது.

டாடா மோட்டார்ஸ், பயணிகள் வாகன வர்த்தக பிரிவின் தலைவர், விவேக் ஸ்ரீவத்ஸா விஸ் காரின் அறிமுகம் குறித்து கூறுகையில், "தியாகோ அதன் பிரிவில் மிகவும் பிரபலமான காரில் ஒன்றாகும், இது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நிலையான வளர்ச்சியில் உள்ளது. பல லட்சம் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் இந்த காருக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். மேலும் இந்த லிமிடெட் பதிப்பானது பிராண்டின் பிரீமியம் அளவைக் கூட்டும் " என்றார்.

0 Comments

இந்தியாவில் இது பண்டிகை காலம் என்பதால் இந்த கால விற்பனையையே பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நம்பியுள்ளனர். அதற்கு ஏற்ப இந்த புது லிமிடெட் பதிப்பை டாடா மோட்டர்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.