புதிய அம்சங்களுடன் டாடா நெக்ஸான் கிரஸ் - சிறப்பு லிமிடெட் எடிஷன் அறிமுகம்

டாடா நிறுவனம் நெக்ஸான் காரின், சிறப்பு லிமிட்டெட் எடிஷனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது

View Photos

டாடா நிறுவனம் நெக்ஸான் காரின், சிறப்பு லிமிட்டெட் எடிஷனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நெக்ஸான் கிரஸ் மற்றும் கிரஸ்+ என இரண்டு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களும் வடிவமைப்பு மற்றும் சில அம்சங்களில் மாற்றம் பெற்றுள்ளன. பெட்ரோல் இன்ஜின் கிரஸ் 7.14 லட்சம் ரூபாய்க்கும், டீசல் இன்ஜின் கிரஸ் 8.07 லட்சம் ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது.

இந்த காரின் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. இந்த செக்மென்டில் டாடாவுக்கு வெற்றியை கொடுத்த கார் நெக்ஸான். மாதம் 4000 கார்கள் விற்பனையாகின்றன.

நெக்ஸான் கிரஸின் வடிவமைப்பில் 10 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முழுவதுமான கருப்பு நிறத்தில், டூயல் டோன் சில்வர் நிறம் கொண்ட மேல் தளமும் ஈர்க்கும் விதமாக இருக்கிறது. இதோடு கான்ட்ராஸ்ட் சேர்க்க நியான் பச்சை நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. ரியர் வியூ மிரர், கேபினின் சில பகுதிகள், முன் பகுதி கிரில், வீல் கவர் போன்ற இடங்களில் வருகிறது.

கேபினின் நிறமும் கருப்பில் தான் இருக்கிறது. டாஷ்போர்டு, கதவுகள், ஸ்டீரிங்க் வீல் ஆகியவை பியானோ கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.lrd55ioc

(கூடுதலாக, 4 ஸ்பீக்கர்கள் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத் டெலிபோனி, கன்ட்ரோல் பட்டன்கள் கொண்ட ஸ்டீரிங், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், பின் பகுதியில் ஏர் வென்ட்கள், மின்னணு முறையில் செயல்படும் ரியர் வியூ கண்ணாடிகள், ரிவர்ஸ் பார்கிங் சென்சார் ஆகியவையும் இந்த சிறப்பு எடிஷனில் உள்ளன.

0 Comments

கிரஸில் 1.2 லிட்டர் ரெவ்ட்ரான் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ரெவ்ட்ரான் இன்ஜின் தேர்வு கொடுக்கப்படுகிறது. இரண்டுமே 108 பி.எச்.பி பவர் கொடுக்கும் திறன் கொண்டவை. 6 ஸ்பீட் மேனுவல் கியர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோட்களும் இதில் உள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.