New Cars and Bikes in India

எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யவுள்ள பிரபல இந்தியா கார் தயாரிப்பு நிறுவனம்

பல கார் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளன

View Photos
புது மாடலில் எலக்ட்ரிக் காரை தயாரிக்கவுள்ளது டாடா

எரிபொருட்களின் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு முதலிய காரணங்களால், பல கார் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளன.

டாடா மோட்டர்ஸ் தற்போது, தங்கள் நிறுவனத்தின் புது எலக்ட்ரிக் காரை 2019 ஜெனிவா மோட்டர் ஷோவில் அறிமுகம் செய்யவுள்ளது. இன்னும் இரண்டு வருடங்களில் புத்தம் புதிய எலக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வர டாடா மோட்டர்ஸ் முடிவு செய்திருப்பதாக அந்த நிறுவனத்தின் எலட்ரிக் பிரிவு தலைவர் ஷைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

 

tata tigor ev

டிகர் இவி காரை ஏற்கெனவே டாடா அறிமுகம் செய்தது 

ஒரு நாளுக்கு 200-250 கிலோ மீட்டர் வரை எலக்ட்ரிக் காரில் செல்வது சாத்தியம் என்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் தட்டுப்பாடு காரணமாக அதன் விலை ஏற வாய்ப்புள்ளதாகவும் சந்திரா தெரிவித்தார்.

0 Comments

டிசைன் மாற்றங்களுக்கு டாடா பவர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சாப்ட்வேர் மற்றும் ஆப்ஸ் மேம்பாடுகளை டிசிஎஸ் நிறுவனம் பார்த்துக் கொள்கிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.