விற்பனையில் கெத்து காட்டும் டாடா டியாகோ கார்!

அக்டோபர் 2017 ஆம் ஆண்டு குஜராத் சணாண்டா ஆலையிலிருந்து 1 இலட்ச டியாகோ கார்களை தயாரித்தது டாடா மோட்டர்ஸ்

View Photos
இரண்டு ஆண்டுகளில் 2 இலட்ச கார்களை விற்று சாதனை படைத்துள்ளது டாடா டியாகோ

கடந்த அக்டோபர் 2017 ஆம் ஆண்டு குஜராத் சணாண்டா ஆலையிலிருந்து 1 இலட்ச டியாகோ கார்களை தயாரித்தது டாடா மோட்டர்ஸ். டியாகோ கார்களை தயாரிக்க ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில், இரண்டு இலட்ச டியாகோ கார்களை விற்றுள்ளதாக டாடா மோட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு, டியாகோ XZA, டியாகோ XTA மற்றும் டியாகோ விஸ் மாடல்களை அறிமுகம் செய்தது டாடா. 2018 ஆம் ஆண்டு, டியாகோ NRG, டியாகோ JTP மாடல்களை டாடா மோட்டர்ஸ் அறிமுகம் செய்தது.

jh4g13c8

டாடா டியாகோ காரில் விரைவில் மாற்றங்கள் வரவுள்ளன

‘வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்த டாடா கார்களில் டாடா டியாகோவும் ஒன்றாகும். ஹாட்ச்-பேக் கார்களில் அதிக விருதுகளை வென்றதும் டாடா டியாகோதான். வாடிக்கையாளர்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி. ஹாட்ச்-பேக் பிரிவில் சிறந்த காராக டாடா டியாகோ இருக்கும்' என டாடா மோட்டர்ஸைச் சேர்ந்த மாயன்க் பரேக் தெரிவித்தார்.

0 Comments

புனே, இங்கிலாந்து மற்றும் இத்தாலி வல்லுநர்களால் டிசைன் செய்யப்பட்ட டாடா டியாகோ, பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வருகிறது. விரைவில் டாடா டியாகோவின் மற்றோரு மாடலை டாடா அறிமுகம் செய்யவுள்ளது.   

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.