டாடா மோட்டார்ஸின் விற்பனை நவம்பரில் 4 சதவீதம் சரிவு

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின்போது டாடா மோட்டார்ஸின் விற்பனை 52,464 யூனிட்டுகளாக இருந்த நிலையில் நடப்பாண்டில் 50,470 - ஆக சரிந்துள்ளது

View Photos

இந்தியாவில் ஆட்டோ மொபைல் துறையின் முக்கிய புள்ளியாக விளங்கும் டாடா மோட்டார்சுக்கு கடந்த மாதம் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விட நடப்பாண்டு நவம்பரில் காரின் விற்பனை 4 சதவீதம் சரிந்திருக்கிறது.

கடந்த 2017 நவம்பர் மாதத்தின்போது டாடா மோட்டார்சில் இருந்த 52,464 கார்கள் விற்பனையாகி இருந்தன. ஆனால் நடப்பாண்டு நவம்பரில் மொத்தம் 50,470 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது.

தொழில்துறையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, அதிக வட்டி விகிதம், எரிபொருளின் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் வாடிக்கையாளர்கள் கார்களை வாங்குவதில் ஆர்வம் ஏதும் காட்டவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக கணக்கிடும்போது டாடா மோட்டார்ஸின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

கடந்த 2017-ல் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கணக்கின்படி மொத்தம் 3,44,137 கார்கள் விற்பனையாகி இருந்தன. நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 4,47,532-ஆக உயர்ந்திருக்கிறது.

0 Comments

தொழில்ரீதியில் வாகனங்களின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது என்றே கூறலாம். கடந்த நவம்பரில் 35,307 கன ரக வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு நவம்பரில் 5 சதவீதம் குறைந்து 33,488 -ஆக சரிந்திருக்கிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.