டாடா நிறுவனத்தின் புது மைக்ரோ எஸ்.யூ.வி..!

இந்த கார் தயாரிக்கப்படும் போது, ஹான்பில் என அழைக்கப்படும்.

View Photos
ஜெனிவா மோட்டர் ஷோவில், டாடா நிறுவனத்தின் சிறந்த கார் இதுவே

ஜெனிவா மோட்டர் ஷோவில், பல கார் நிறுவனங்கள் தங்களின் புது கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. அவ்வாறு, டாடா நிறுவனமும் தங்கள் நிறுவனத்தின் புது கார் கான்செப்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

மைக்ரோ எஸ்.யூ.வி-யான அந்த கார், ‘ஹெச் 2 எக்ஸ்' கான்செப்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த காரின் தயாரிப்பு 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும். 2020 ஆம் ஆண்டின் பின் பாதியில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6t8lkd4

இந்த காரின் உட்புற டிசைன் முற்றிலும் புதியதாக உள்ளது

ஜெனிவா மோட்டர் ஷோவில், டாடா நிறுவனத்தின் சிறந்த கார் இதுவே. இதன் டிசைன் அற்புதமாக உள்ளது. ஆல்பா மூலம் தயாரிக்கப்படும் இந்த கார், இம்பாக்ட் 2.0 டிசைனில் உருவாக்கப்படுகிறது.

மைக்ரோ எஸ்.யூ.வி பிரிவில் டாடா நிறுவனத்தின் கார்கள் இல்லை. இந்தப் பிரிவில் மஹிந்திரா கேயூவி 100, மாருதி சூசுகி பியூட்சர் எஸ் கான்செப்ட் வாகனங்களே உள்ளன. எனவே அந்த வாகனங்களுக்குப் போட்டியாக இந்தப் புது காரை களமிறக்குகிறது டாடா.

0 Comments

3.8 மீட்டர் நீளத்தில் இருக்கும் இந்த கார், ஆல்பா ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும். இந்த கார் தயாரிக்கப்படும் போது, ஹான்பில் என அழைக்கப்படும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.