New Cars and Bikes in India

ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படும் டாடா கார்..!

புது வித டெயில் லாம்ப், 16 இன்ச் அலாய் சக்கரம், பனிகால லாம்ப்கள் இந்த காரில் உள்ளன.

View Photos
2019 ஜெனிவா மோட்டர் ஷோவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படுகிறது

Highlights

  • 45 எக்ஸ் கார் தான் டாடா நிறுவனத்தின் முதல் ப்ரிமியம் ஹாட்ஸ்பேக் கார்.
  • இந்த காரின் மெக்கானிக்கல் விவரங்கள் இது வரை வெளியாகவில்லை
  • டாடா 45 எக்ஸ் கார் இந்திய ரோடுகளில் டெஸ்ட் செய்யும் படம் வெளியாகியுள்ளது

ஜெனிவா மோட்டர் ஷோ என்பது மிகவும் பிரபலமானது. இந்த மோட்டர் ஷோவில்தான் பல முக்கிய கார்கள் அறிமுகம் செய்யப்படும். இந்த மோட்டர் ஷோவில் தான் டாடா மோட்டர்ஸ் தங்களின் முக்கிய கார்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த ஆண்டு 45 எக்ஸ் காரை டாடா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

defjr32gபல முக்கிய கார்களை ஜெனிவா மோட்டர் ஷோவில்தான் டாடா அறிமுகம் செய்துள்ளது

இந்த புது டாடா 45 எக்ஸ் கார் இந்திய சாலைகளில் டெஸ்ட் செய்யும் படங்கள் வெளியாகியுள்ளன. புது வித டெயில் லாம்ப், 16 இன்ச் அலாய் சக்கரம், பனிகால லாம்ப்கள் இந்த காரில் உள்ளன.

இந்த காரில் வட்டமாக இருக்கும் டிசைன் இப்போது மாற்றப்பட்டுள்ளது. இந்த காரில் இம்பாக்ட் 2.0 டிசைனை அறிமுகம் செய்துள்ளது டாடா நிறுவனம்.

43f54p6இந்த கார்தான் டாடாவின் ப்ரீமியம் ஹாட்ச்பேக் மாடல் கார்  

45 எக்ஸ் கார் தான் டாடா நிறுவனத்தின் முதல் ப்ரீமியம் ஹாட்ச்பேக் கார். மாருதி சூசுகி பாலினோ, ஹூண்டாய் ஐ20, வோல்க்ஸ்வாகன் போலோ ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த டாடா 45 எக்ஸ் இருக்கும் என எண்ணப்படுகிறது.

93hmbeugஇதன் மெக்கானிக்கல் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை

இந்த காரின் மெக்கானிக்கல் விவரங்கள் இது வரை வெளியாகவில்லை. 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின் இந்த டாடா 45 எக்ஸ் காரில் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

0 Comments

Image Source: cartoq.com

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.