விரைவில் பைக் தயாரிப்பு தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவ இருக்கும் சுசூகி

ஜப்பானை மையமாகக் கொண்ட சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது இரண்டாவது பைக் தயாரிப்பு தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவ திட்டமிட்டுள்ளது.

View Photos

ஜப்பானை மையமாகக் கொண்ட சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது இரண்டாவது பைக் தயாரிப்பு தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவ திட்டமிட்டுள்ளது.

சுசூகி நிறுவனம் 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய சந்தையில் கால் பதித்தது. இந்நிறுவனத்தின் முதல் பைக் தயாரிப்பு தொழிற்சாலை குருகிராமில் இயங்கி வரும் நிலையில், தன்னுடைய இரண்டாவது தயாரிப்பு ஆலையை நிறுவ உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இடம் பார்த்து வருகிறது.

பைக்

ஏற்கனவே குருகிராமில் இருக்கும் தொழிற்சாலை 5.40 லட்சம் யூனிட்டுகள் தயாரிக்கும் திறன் கொண்டிருக்கும் நிலையில், 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவ இருக்கும் இரண்டாவது ஆலையின் தயாரிப்பு திறன் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த ஆலை வரும் 2021 - 2022 நிதியாண்டில் செயல்படத் துவங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வருகிற 2021 ஆண்டில் சுசூகி நிறுவனம் ஒரு மில்லியன் விற்பனையை எட்ட முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, 2017-18ம் நிதியாண்டில் 5 லட்சம் பைக்குகளை அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2018 - 19ம் நிதியாண்டில் 7 லட்சம் பைக்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

0 Comments

மேலும் 800 சிசி பைக்குகள் பிரிவில் விஸ்டோர்ம் 650 பைக்கை அறிமுகப்படுத்தவும் சுசூகி திட்டமிட்டுள்ளது.  தற்போது தனது புதிய தயாரிப்பான பர்க்மேன் ஸ்டீர் 125ஐ 68,000 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆக்சஸ் 125யின் சேஸிஸ் மற்றும் இன்ஜினைக் கொண்டுள்ளது இந்த பர்க்மேன் ஸ்டீரிட் 125.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Suzuki Hayabusa with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.