சுசூகி பர்க்மேன் ஸ்டீர்ட் 125 ஸ்கூட்டர் ரூபாய் 68000க்கு இந்தியாவில் அறிமுகம்

சுசூகி நிறுவனம் தனது பர்க்மேன் ஸ்டீர்ட் 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதன் விலை ரூ. 68,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

View Photos

சுசூகி நிறுவனம் தனது பர்க்மேன் ஸ்டீர்ட் 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதன் விலை ரூ. 68,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான ஸ்கூட்டர் வடிவமைப்பில் இருந்து வித்தியாசமான அமைப்பில் இருக்கும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் கடினமான தோற்றத்தில் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

burgman street

ஸ்கூட்டர் விற்பனையில் முண்ணனியில் இருக்கும் ஆக்ஸஸ் 125 மாடலின் சேஸ் மற்றும் இன்ஜினை இந்த பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 கொண்டுள்ளது. 8.7 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 35-40 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

cai4egco
0 Comments

மேலும், இந்த ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், சுசூகி ஜிக்ஸரின் டிஜிட்டல் வடிவமைக் கொண்டுள்ளது. பர்க்மேன் ஸ்ட்ரீட் 125, ஹோண்டா கிரேசியா, டிவிஎஸ் என்டார்க் 125, ஏப்ரில்லா எஸ் ஆர் 125க்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.