வர்த்தக வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி தேவையில்லை - நிதின் கட்கரி

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், எத்தனால், மெத்தனால், பையோ எர்பொருள், சி.என்.ஜியில் இயங்கும் வர்த்தக வாகனங்களுக்கு பெர்மிட் வாங்க அவசியம் இல்லை

View Photos

வர்த்தக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள், வேகக் கட்டுப்பாட்டு கருவியை கட்டாயம் பொருத்தி இருக்க வேண்டும் என்ற விதியை ரத்து செய்ய இருப்பதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம், வர்த்தக வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவியை கட்டாயமாக்கியது கர்நாடக உயர்நீதிமன்றம். ஆனால், இதற்கு வாகன உரிமையாளர்கள் அமைப்பு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த ரத்து எப்போதில் இருந்து அமலுக்கு வரும் என்று கட்கரி தெரிவிக்கவில்லை. அதுவரை வேகக் கட்டுப்பாட்டு கருவியுடன் தான் வாகனங்கள் இயங்க வேண்டும். மேலும், மோட்டார் வாகன சட்டத்திலும் இதற்கேற்ற மாற்றம் செய்யப்பட வேண்டும்.

தற்போதுள்ள வேகக் கட்டுப்பாட்டு விதியின் கீழ், பேருந்து மற்றும் டாக்ஸிகளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ. லாரிகளுக்கு மணிக்கு 60 கி.மீ. மூன்று சக்கர வாகனங்களுக்கும், பள்ளி பேருந்துகளுக்கும் 40 கி.மீ தான் அதிகபட்ச வேகம்.

மேலும், 2022-ம் ஆண்டு முதல், டிரைவர் அசிஸ்டென்ஸ் தொழில்நுட்பம் அனைத்து வாகனங்களிலும் கொண்டு வரப்படும் எனவும், 2019-ம் ஆண்டு முதல் வெளி வர உள்ள கார்களில் கட்டாய ஏர்பேக்குகள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சாரும் இருக்க வேண்டும் என விதி போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 Comments

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், எத்தனால், மெத்தனால், பையோ எர்பொருள், சி.என்.ஜியில் இயங்கும் வர்த்தக வாகனங்களுக்கு பெர்மிட் வாங்க அவசியம் இல்லை என்ற விதி விலக்கு அளிக்கப்படும் என்றார்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.