New Cars and Bikes in India

ஸ்கோடாவின் அட்டகாசமான எலக்ட்ரிக் கார்!

2019 ஜெனிவா மோட்டர் கண்காட்சியில் தங்களின் வருங்கால மாடலான விஷன் Iv கான்செப்டை விளக்க உள்ளது ஸ்கோடா.

View Photos
2019 ஆம் ஆண்டு தனது முதல் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யவுள்ளது ஸ்கோடா

சமீபகாலமாக கார் தயாரிப்பில் பல தொழிற்நுட்ப முன்னேற்றங்கள் காணப்படுகிறது. எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உலகம் முழுவதும் அதிகரிக்க துவங்கியுள்ளன.

செக் குடியரசைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் இந்த எலக்ட்ரிக் கார்களில் மேலும் ஒரு புதுமையை புகுத்தியுள்ளது. அதன் வருங்கால எலக்ட்ரிக் கார்களின் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது ஸ்கோடா.

sahl4ha8

அறிமுகம் செய்யப்படவுள்ள காரின் மாடல்

2019 ஜெனிவா மோட்டர் கண்காட்சியில் தங்களின் வருங்கால மாடலான விஷன் Iv கான்செப்டை  விளக்க உள்ளது ஸ்கோடா.

முதன்முறையாக எம்.இ.பி மாடலில் தயாரிக்கப்படவுள்ள தங்களின் கார்களின் வரைபடத்தை ஸ்கோடா வெளியிட்டுள்ளது. ஸ்டைலான டிசைன் உடன் 22 இன்ச் ஏரோடைனாமிக் சக்கரங்கள், கூர்மையான ரூப்லைன் என அந்த வரைபடத்தில் உள்ள கார்கள் படு ஸ்டைலாக உள்ளது.

acomsg98

இந்த புது மாடலில் ஏரோடைனாமிக் சக்கரங்கள் உள்ளது 

0 Comments

தனது முதல் எலக்ட்ரிக் காரை 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளது ஸ்கோடா. சூப்பர்ப் PHEV என கூறப்படும் அந்த காரில் ஹைப்ரிட் டிரைவ் வசதியுள்ளது. எலக்ட்ரிக் கார்களுக்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் இரண்டு மில்லியன் யூரோ முதலீடு செய்யவுள்ளது ஸ்கோடா. 2022 ஆம் ஆண்டுக்குள் 10 எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யவுள்ளது ஸ்கோடா.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.