New Cars and Bikes in India

சென்னை ராயல் என்ஃபீல்ட் ஆலையில் வேலை நிறுத்தப் போராட்டம் - உற்பத்தி பாதிப்பு!

கடந்த 3 மூன்று மாதங்களில் ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

View Photos
கடந்த செப்டம்பர் - நவம்பர் மாதத்தில் இவ்வாறு வேலை நிறுத்ததில் ஊழியர்கள் ஈடுப்பட்டனர்

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை சென்னையின் ஓரகடம் பகுதியில் உள்ளது. அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுப்பட்டுள்ளனர். கடந்த 3 மூன்று மாதங்களில் ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த வேலை நிறுத்தம் செய்யப்படுகிறது. 2018 ஆம் ஆண்டின் இறுதியில் 50 நாட்கள் இவ்வாறு வேலை நிறுத்ததில் ராயல் என்ஃபீல்ட் ஊழியர்கள் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ராயல் என்ஃபீல்டின் தலைமை நிறுவனமான ஏய்சர் மோட்டர்ஸ், ‘எங்கள் நிறுவனத்திற்கு ஊழியர்களின் நல்வாழ்வு தான் எங்களுக்கு முக்கியம். ஊழியர்களுக்குத் தேவையான அனைத்தையும் எங்கள் நிறுவனம் செய்து தருகிறது. இருந்தும் இவ்வாறு வேலை நிறுத்ததில் அவர்கள் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை நாங்கள் கேட்டு அறிந்து இந்த வேலை நிறுத்ததை விரைவில் முடிவிற்கு கொண்டு வருவோம்' எனத் தெரிவித்தது.

0 Comments

செப்டம்பர் மாதம் நடந்த வேலை நிறுத்தத்தால் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் பெரிதும் பாதிக்கப்பட்டது. செப்டம்பர் 24 முதல் நவம்பர் 12 காலத்தில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் 28,000  பைக் உற்பத்தி பாதிக்கப்பட்டன. தற்போது இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினென்டல் 650 பைக்குகளின் தயாரிப்புகள் முழுவீச்சில் நடைபெறும் நேரத்தில் ஊழியர்களின் வேலை நிறுத்தம் அந்த நிறுவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.