ராயல் என்ஃபீல்டின் தண்டர் பேர்டு 500 எக்ஸ் இந்தியாவில் லான்ச் - விலை ரூ.2.13 லட்சம்

கம்பீரமான தோற்றம், இளமையான வடிவமைப்பு, கவர்ச்சிகரமான வண்ணங்கள் என பல சிறப்பு அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன

View Photos
5 கியர் பாக்ஸ்கள் இதில் உள்ளன. இரட்டை ஷாக் அப்சார்பர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர் பேர்டு 500 எக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் விலை ரூ. 2.13 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பு சில மாதங்களுக்கு முன்பாக இந்த பைக்கை புக் செய்வதற்கான புக்கிங் ஒபன் ஆனது.

கம்பீரமான தோற்றம், இளமையான வடிவமைப்பு, கவர்ச்சிகரமான வண்ணங்கள் என பல சிறப்பு அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன. பெட்ரோல் டேங்க், ஃப்ளாட்டான சீட், ஹேண்டில் பார்கள், அலாய் வீல்கள், ட்யூப்ஜெஸ் டயர்கள் ஆகியவை சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

2018 royal enfield thunderbird 500x

(கிளாசிக் 500 சிசி மற்றும் தண்டர்பேர்டு 350 எக்ஸ் ஆகியவற்றில்  ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கடந்த மாதம் பொருத்தப்பட்டது. )

பழைய மாடலில் இருந்த அதே 499 சிசி எஞ்சின்தான் இந்த மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதனைத் தவிர்த்து பாதுகாப்பு அம்சங்களில் கூடுதலாக ஏதும் சேர்க்கப்படவில்லை. இந்த எஞ்சின் 27 பி.எச்.பி. திறனை வெளிப்படுத்துகிறது. 5 கியர் பாக்ஸ்கள் இதில் உள்ளன. இரட்டை ஷாக் அப்சார்பர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

பழைய மாடல்களை அப்டேட் செய்யும் நடவடிக்கையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளளது. கிளாசிக் 350 கடந்த ஆகஸ்டில் அப்டேட் செய்யப்பட்டு வெளியானது. கிளாசிக் 500 சிசி மற்றும் தண்டர்பேர்டு 350 எக்ஸ் ஆகியவற்றில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கடந்த மாதம் பொருத்தப்பட்டது.

0 Comments

125 சிசிக்கும் அதிகமான செயல் திறன் கொண்ட எஞ்சின்களில் ஏப்ரல் 1, 2019 முதல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்ட வரப்பட்டுள்ளது.​

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.