ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஏபிஎஸ் உடன் விற்பனைக்கு வந்தது

புதிய ஏபிஎஸ் ஹிமாலயனின் விலை, மூன்றாம் நபர் காப்பீட்டுடன் சேர்த்தால் விலை 2.20 லட்சம் ரூபாயை எட்டுகிறது

View Photos

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், ஏபிஎஸ் உடன் கூடிய ஹிமாலயன் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதன் விலை 1.79லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஏபிஎஸ் இல்லாத மாடலைக் காட்டிலும் 11000 ரூபாய் விலை அதிகம்.

0 Comments

ராயன் என்ஃபீல்டு தயாரிப்புகளில், கிளாசிக் 350சிக்னல்ஸ் சிறப்பு எடிஷன் பைக்குக்கு அடுத்து ஹிமாலயன் தான் ஏபிஎஸ் பெற்றுள்ளது. ஏபிஎஸ் ஹிமாலயனில் மெக்கானிக்கலாக எந்த மற்றமும் செய்யப்படவில்லை.

sdkpp0do

411 சி.சி ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் கொண்ட ஹிமாலயன், 24 பிஎச்பி பவரும், 32 என்.எம் டார்க்கும் கொடுக்கும் திறன் கொண்டது. 5 ஸ்பீட் கியரும் இதில் உள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில், ஏபிஎஸ் சின்னம் மட்டும் இருக்கிறது. இதை ஆஃப் செய்ய முடியாது. புதிய ஏபிஎஸ் ஹிமாலயனின் விலை, மூன்றாம் நபர் காப்பீட்டுடன் சேர்த்தால் விலை 2.20 லட்சம் ரூபாயை எட்டுகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.