இணையதள பிரச்னையால் ராயல் என்பீல்ட் பெகாசஸ் 500 விற்பனை பாதிப்பு !

புல்லட் காதலர்களின் கனவு நிறுவனமான ராயல் என்பீல்ட் தனது புதிய தயாரிப்பான பெகாசஸ் 500 கிளாஸிக் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

View Photos

புல்லட் காதலர்களின் கனவு நிறுவனமான ராயல் என்பீல்ட் தனது புதிய தயாரிப்பான பெகாசஸ் 500 கிளாஸிக் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மாடலில் மொத்தம் 1000 பைக்குகள் மட்டுமே விற்பனைக்குத் தயாரிக்கப்பட உள்ளதாகவும், அதில் 250 பைக்குகள் மட்டுமே இந்தியாவிற்கு விற்பனைக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த மாடல் பைக்கிற்கு அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த பைக்கை ஷோரூம்களில் வாங்க முடியாது. இதற்காக ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் மட்டுமே முன் பதிவு செய்து வாங்க முடியும்.

 

அப்படி என்ன இந்த பைக்கில் ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? இரண்டாம் உலகப் போரின் போது, பயன்படுத்தப்பட்ட பெகாசஸ் பைக்கின் வடிவிலேயே இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது.

போரின்போது, பாராசூட் வீரர்கள் வானில் இருந்து குதித்து, எதிரிகளின் இலக்கைத் தாக்க இந்த வகை பைக்குகளைப் பயன்படுத்தினார்கள். இதனால், இந்த பைக்குகள் மிகவும் புகழ்பெற்றது.

இதனையடுத்து தனது கிளாஸிக் 500 மாடல் பைக்குகளின் வடிவமைப்பையும், பெயிண்ட் தோற்றத்தையும் மாற்றி பெகாசஸாக ராயல் என்பீல்ட் வெளியிட உள்ளது.

சாதராண பைக்குகளைப் போல இல்லாமல் இதன் கலர், லுக் எல்லாமே மிகவும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே 499 சிசி இன்ஜினும் 27.6 பிஎச்பி பவரும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கின் ஆன் ரோடு விலை ரூபாய் 2.49 லட்சம்(டெல்லி).

இதற்கான விற்பனையை ஜூலை 10ம் தேதி ஆன் லைனில் தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்திற்குள்ளாகவே அதிக அளவு வாடிக்கையாளர்களால் இணையதளம் கிராஷ் ஆனது.

0 Comments

இதனையடுத்து, தற்சமயம் விற்பனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இணையதளம் குறித்த தொழிற்நுட்ப பிரச்னை சரி செய்யப்பட்டவுடன் மீண்டும் விற்பனை தொடங்கும் என்றும் ட்விட்டரில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.