பிரபல ராயல் என்ஃபீல்ட் பைக்கில் ஏபிஎஸ் வசதி... விவரங்கள் உள்ளே!

ராயல் என்ஃபீல்ட் க்ளாசிக் 350 ஏபிஎஸ் பைக்கின் விலை 1.53 இலட்ச ரூபாயாக நிர்ணக்கப்பட்டுள்ளது.

View Photos
ஏப்ரல் 1,2019 முதல் அனைத்து பைக்குகளிலும் ஏபிஎஸ் வசதி கட்டாயம் என்ற சட்டம் வரவுள்ளது

பைக்குகளில் ஏபிஎஸ் கட்டாயம் என இந்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது. எனவே அனைத்து பைக் நிறுவனங்களும் தாங்கள் தயாரிக்கும் பைக்குகளில் ஏபிஎஸ் வசதி கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் க்ளாசிக் 350 மாடலில் ஏபிஎஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்ஃபீல்ட் க்ளாசிக் 350 ஏபிஎஸ் பைக்கின் விலை 1.53 இலட்ச ரூபாயாக நிர்ணக்கப்பட்டுள்ளது.

Royal Enfield Classic 350

1.49 Lakh * On Road Price (New Delhi)
Royal Enfield Classic 350

ஏபிஎஸ் வசதியைத் தவிர இந்த பைக்கில் வேறு மெக்கானிக்கல், டெக்னிக்கல் மாற்றங்கள் இல்லை. 346 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பெற்றுள்ள இந்த ராயல் என்ஃபீல்ட் க்ளாசிக் 350 ஏபிஎஸ், 5250 rpm இல் 19.8 bhp பவரையும் 4000 rpm இல் 28 Nm உட்ச டார்க்கையும் வெளியிடும்.

vnbt0ff4

இரண்டு மாடல்களை தவிர ஏனைய ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில் ஏபிஎஸ் வசதி உள்ளது

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பைக்குகளில் புல்லட் 350 மற்றும் 350 இஎஸ் பைக்குகளைத் தவிர ஏனைய பைக்குகளில் ஏபிஎஸ் வசதி வந்துள்ளது. ஏப்ரல் 1, 2019 முதல், இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் வசதி கட்டாயம் என்பதால் விரைவில் புல்லட் 350 மற்றும் 350 இஎஸ் பைக்குகளிலும் ஏபிஎஸ் வசதி பொருத்தப்படும்.

0 Comments

ஜாவா 42, பஜாஜ் டாமினார் முதலிய பைக்குகளுடன் போட்டி போட உள்ளது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ஏபிஎஸ்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Royal Enfield Classic 350 with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.