ராயல் என்ஃபீல்டின் அடுத்த வண்டி.... விலை என்ன தெரியுமா?

ஏப்ரல் 1, 2019-க்குப் பின் அனைத்து 125 சிசி+ வாகனங்களுக்கும் ABS வசதி இருக்க வேண்டும் என்று விதிமுறை அமலுக்கு வருகிறது.

View Photos
இனி அனைத்து 125 சிசி+ வாகனங்களும் ABS வசதியுடனே வரும்

Highlights

  • 125 சிசி + வாகனங்கள் இனி ABS உடன் வரும்
  • ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில் அடுத்தது 350 சிசி க்கு ABS வர உள்ளது
  • இந்த பைக்கின் விலை 1.86 இலட்சம்

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புது பைக்காக ராயல் என்ஃபீல்ட் 500 சிசி ABS அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் வாகனங்களில் ABS வசதியுடன் வெளிவரும் முதல் பைக் இதுதான். 1.86 லட்ச ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த பைக், தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

500 சிசி-யைத் தொடர்ந்து, ராயல் என்ஃபீல்ட் 350 சிசி-யிலும் விரைவில் ABS வசதி வரவுள்ளது. வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின்னர் அனைத்து 125 சிசி ப்ளஸ் வாகனங்களுக்கும் ABS வசதி இருக்க வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே, ராயல் என்ஃபீல்ட் தன் அனைத்து பைக்குகளுக்கும் ABS வசதி பொருத்துகிறது.

royal enfield bullet 500 forest green

மெக்கானிக்கலாக இந்த பைக்கில் மாற்றங்கள் இல்லை.

இந்த ABS வசதியை தவிர வேறு புது அம்சங்கள் ராயல் என்ஃபீல்ட் 500 சிசி ABS பைக்கில் இல்லை. சிங்கிள் இருக்கை, ஸ்போக் சக்கரம் (Spoke Wheel) , 19 இன்ச் முன் சக்கரம், 18 இன்ச் பின் சக்கரம் என பழைய டெக்னிக்கல் விஷயங்களுடனே இந்த பைக்கும் வருகிறது.

0 Comments

மெக்கானிக்கலாகவும் மாற்றங்கள் இல்லை. 499 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின், 27 bhp மற்றும் 41 Nm டார்க், 5 கியர் என பழைய மெக்கானிக்கல் விஷயங்களுடனே இந்த புது பைக்கும் வருகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.