New Cars and Bikes in India

பிரக்ஸிட்டால் இக்கட்டான நிலையில் ரோல்ஸ் ராய்ஸ்..!

சென்ற வாரம் பிரக்ஸிட் நிலைமையால் 10000 பேர் வேலையை விட்டு நீக்க நேரிடும் என ஜாக்குவார் தெரிவித்திருந்தது

View Photos
பல நிறுவனங்கள் இந்த பிரக்ஸிட்டால் பாதிக்கபடுகிறது

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளிவருவதாக பிரிட்டன் அறிவித்திருந்தது. இந்நிலையில், அதற்கு பிரிட்டனில் செயல்படும் பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளிவரும் முடிவை பிரிட்டன் மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் வழியுறுத்தி வருகின்றனர்.

மேலும் டீல் இல்லாத பிரக்ஸிட் நிரைவேற்ற கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.  ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை பிரக்ஸிட் என அழைக்கின்றனர்.

உலக புகழ் பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனமானது தெற்கு இங்கிலாந்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமும் டீல் இல்லாத பிரக்ஸிட் முடிவினை மறுபரிசீலனை செய்யும் படி பிரிட்டன் அரசிடம் கேட்டுள்ளது. தங்கள் கார் தயாரிப்புக்கு தேவையான பொருட்களை அண்டை நாடுகளிடம் இருந்து வாங்கும் ரோல்ஸ் ராய்ஸ்,டீல் இல்லாத பிரக்ஸிட் மூலம் இந்த பொருட்களை பெருவதில் சிக்கல்கள் ஏற்படும் என எண்ணுகிறது.

விமான தயாரிப்பாளர்களான ஏர்பஸ் SE, தங்கள் விமானங்களின் இறகுகளை பிரிட்டனில் தான் தயாரிக்கிறது. டீல் இல்லாத பிரக்ஸிட் நடக்குமா இல்லையா என குழப்பம் நிலவுவதால், ஏர்பஸ் SE யின் தயாரிப்பு செலவுகள் கணக்கிடுவதில் சிக்கல் நிலவுகிறதாக ஏர்பஸ் SE யின் தாம் எண்டெர்ஸ் தெரிவித்திருந்தார்.

பிரிட்டனின் பிரதமர் தெரேசா மே, டீல் இல்லாத பிரக்ஸிட் முன்மொழிந்துள்ளார். ஆனால், இதனை நீதிமன்றம் நிராகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். அடுத்த வாரம் இது, பாராளுமன்றத்தில் விவாததிற்கு வரவுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ், புது இறக்குமதி விதிமுறைகளை தனக்கு கார் பாகங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு மார்ச் 29 முதல் விளக்கவுள்ளது. மேலும் அஸ்தான் மார்ட்டின் கார் நிறுவனம் போல், சில பாகங்களை விமானம் மூலம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அவ்வாறு செய்கையில், செலவு பன்படங்கு உயரும்.

24 மணி நேரத்திற்கு மேல் இறக்குமதி செய்த பாகங்களை வைத்துக் கொள்ளாத ரோல்ஸ் ராய்ஸ், டீல் இல்லாத பிரக்ஸிட் மூலம் அதிகமாக பாதிக்கபடவுள்ளது.

ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை தயாரிக்க, 32000 பாகங்கள் தேவைப்படும். அந்த பாகங்களை 600 நிறுவனங்களிடம் இருந்து வாங்குகிறார்கள். பிரிட்டனில் இருந்து 8 சதவிகித பாகங்களை மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் பெறுகிறது. ஒரு  ரோல்ஸ் ராய்ஸ் காரை செய்ய சுமார் 800 மணி நேரம் தேவை படுகிறது. டீல் இல்லாத பிரக்ஸிட் செயல்பாடுக்கு வந்தால், தேவையான ஒரு பாகம் கிடைக்காவிட்டாலும் தயாரிப்பு முடங்கிபோய்விடும்.

சென்ற வாரம் டீல் இல்லாத பிரக்ஸிட் நிலைமையால் 10000 பேர் வேலையை விட்டு நீக்க நேரிடும் என ஜாக்குவார் தெரிவித்திருந்தது. என்ன நேர்ந்தாலும், பிரிட்டனை விட்டு போவதாக இல்லை என ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தை விட்டு வேறு நாட்டிற்கு சென்றால், தங்கள் நிறுவனத்தின் மீதுள்ள மதிப்பும் மரியாதையையும் போய்விடும் என ரோல்ஸ் ராய்ஸ் சேர்ந்த தாம் எண்டெர்ஸ் தெரிவித்திருந்தார்.

விமான தயாரிப்பில் மிக கடினமானது அதன் இறகுகள் தயாரிப்பாகும். கடந்த 10 வருடங்களாக இறகுகளை தயாரிக்க ஏற்றதாக பிரிட்டன் மாறியுள்ளது. அதனால், ஏர்பஸ்ஸும் பிரிட்டனை விட்டு போவது கடினம் தான் என தெரிவித்துள்ளது.

0 Comments

இதனால் டீல் இல்லாத பிரக்ஸிட் நிறைவேற்ற கூடாது எனவும் இதனை பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர். அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் டீல் இல்லாத பிரக்ஸிட் நிலைமை என்ன என்பது தெரிந்து விடும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.