சாலை பாதுகாப்பு வாரமும் கார்களின் பாதுகாப்பு அம்சங்களும்

இந்தியாவில் சாலை பாதுகாப்பு வாரமாக பிப்ரவரி 4 – பிப்ரவரி 10 அறிவிக்கப்பட்டுள்ளது

View Photos
சாலை பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வில் பல கார் நிறுவனங்கள் ஈடுப்பட்டுள்ளனர்

இந்தியாவில் சாலை பாதுகாப்பு வாரமாக பிப்ரவரி 4 – பிப்ரவரி 10 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல கார் நிறுவனங்கள் சாலை பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஹூண்டாய் நிறுவனம், போக்குவரத்து விதிமுறைகளை குறித்தும் சாலை பாதுகாப்புகளை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தங்களது வாகனங்களுக்கு இலவச பாதுகாப்பு சர்வீஸ் செய்து தருகிறார்கள்.

ஹூண்டாயை தவிர மாருதி சூசுகி நிறுவனமும் இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் ஆர்வம் காட்டியுள்ளனர். மாருதி சூசுகி தங்களது கார்களில் மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

டாடா நிறுவனத்தின் காரான டாடா நேக்சான், இந்தியாவில் பாதுகாப்பு அம்சங்களுக்காக 5 ஸ்டார் பெறும் முதல் காராகும். தங்களது ஏனைய கார்களையும் 4 அல்லது 5 ஸ்டார் பெறும் அளவிற்கு வடிவமைக்கவுள்ளது டாடா.

0 Comments

பாதுகாப்பு அம்சங்களில் தங்களது கார்கள் சளைத்ததில்லை என்பதை மராஷோ கார் மூலம் நிருப்பித்தது மஹிந்திரா. சர்வதேச பாதுகாப்பு அம்சங்களுக்காக 4 ஸ்டார்களை பெற்றது இந்த மராஷோ கார். இந்த காரில் இரண்டு ஏர் பேக், ABS, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.