அறிமுகம் ஆனது அப்டேட் செய்யப்பட்ட போர்ஷ் மோட்டர்ஸின் கார்... விவரங்கள் உள்ளே!

பாதுகாப்பு வசதிகளுடன் புது அப்டேட் காரை விரைவில் போர்ஸ் மோட்டர்ஸ் அறிமுகம் செய்யும் என எண்ணப்படுகிறது.

View Photos
இந்த காரில் மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லை

புனேயின் போர்ஷ்  மோட்டர்ஸ் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட குர்க்காவை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புது போர்ஷ்  குர்க்காவில் ஏபிஎஸ் வசதி உள்ளது.

இந்த காரின் விலை 11.05 லட்சம் ரூபாய் முதல் 13.30 லட்சம் ரூபாய் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் வசதியில்லாத குர்க்காவின் விலை 9.99 லட்சம் ரூபாயாகும்.

மெக்கானிக்கலாக இந்த அட்டேட் செய்யப்பட்ட காரில் அதிக மாற்றமில்லை. 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பெற்றுள்ள இது 138 bhp மற்றும் 321 Nm உட்ச டார்க் பெற்றுள்ளது. டாப் எக்ஸ்டிரிம் வகை காரில் எல்இடி இண்டிக்கேட்டர், ஸ்டில் பம்பர் உள்ளது.

0 Comments

இந்த புது அப்டேட் காரில் ஏபிஎஸ் வசதி மட்டுமே பிரதானமாக உள்ளது. புது பாதுகாப்பு விதிகளின் படி, டிரைவர் சைட் ஏர்-பேக், ஸ்பீட் அலர்ட், பின் பக்க பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகியவை கட்டாயமாகும். எனவே இந்த பாதுகாப்பு வசதிகளுடன் புது அப்டேட் காரை விரைவில் போர்ஷ்  மோட்டர்ஸ் அறிமுகம் செய்யும் என எண்ணப்படுகிறது.  

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.