2023-க்குள் 7 ஆயிரம் ஊழியர்களை நீக்கம் செய்கிறது ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறது. இதையொட்டி ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

View Photos
ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு 5.9 பில்லியன் யூரோ மிச்சம் செய்ய முடியும் என்கிறது ஃபோக்ஸ்வோகன்

ஜெர்மன் கார் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் வரும் 2023-க்குள் 7 ஆயிரம் ஊழியர்களை நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களை தயாரித்து ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. 

இதுகுறித்து ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கார் தயாரிப்பில் மாற்றங்களை விரைவாக கொண்டு வருவோம். இந்த ஆண்டுக்குள் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சந்தையில் ஃபோக்ஸ்வேகனின் விற்பனையை அதிகப்படுத்துவதற்கு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன'' என்று கூறப்பட்டுள்ளது. 

ஃபோக்ஸ் வேகன் அறிவிப்பின்படி சுமார் 11 ஆயிரம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு 5.9 பில்லியன் யூரோ அளவுக்கு அந்த நிறுவனம் மிச்சம் செய்ய முடியும். 

ஊழியர்களை குறைப்பு செய்தாலும், வருங்காலத்தில் பேட்டரி ரக கார்கள்தான் முக்கிய ரோலாக ஆட்டோ மொபையில் துறையில் இருக்கும் என ஃபோக்ஸ்வேகன் கணித்துள்ளது. இதனால் சுமார் 19 பில்லியன் யூரோ வரைக்கும் அதற்காக செலவிட தயாராகியுள்ளது. 

இதேபோன்று எலக்ட்ரானிக் கார்களை தயாரிக்கும் பணியில் 2 ஆயிரம் புதிய பணிகளை உருவாக்க முடியும். இவற்றில் தொழில்நுட்ப மற்றும் சாஃப்ட்வேர் ஊழியர்களும் அடங்குவார்கள். இவ்வாறு பணிக்கு எடுக்கப்படும் ஊழியர்கள் 2025 வரைக்கும் பணியில் இருப்பார்கள். 

0 Comments

மாறிவரும் காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் மற்றும் எலக்ட்ரிக் துறையில் காலடி பதிப்போம் என்று ஃபோக்ஸ்வேகனின் தலைமை அதிகாரி ரால்ஃப் தெரிவித்துள்ளார். 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.