New Cars and Bikes in India

போர்ஷ் காரின் விலை 'கிடு கிடு' உயர்வு!

மார்ச் மாதம் 29 ஆம் தேதி பிரெக்சிட் அமலுக்கு வந்தால், இங்கிலாந்தில் போர்ஷ் கார்களில் விலை 10 சதவிகிதம் வரை உயரும்

View Photos
10 சதவிகிதம் வரை விலை உயர்வு அடைகிறது போர்ஷ்

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கார் நிறுவனம் போர்ஷ் ஆகும். அதி நவீன உயர் ரக கார்களை தயாரிப்பதில் பெயர் பெற்றது இந்த போர்ஷ் நிறுவனம்.

இங்கிலாந்து மக்களுக்கு சமீபத்தில் போர்ஷ் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் 29 ஆம் தேதி பிரெக்சிட் அமலுக்கு வந்தால், இங்கிலாந்தில் போர்ஷ் கார்களில் விலை 10 சதவிகிதம் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெக்சிட் குறித்தான தெளிவான முடிவை இதுவரை பிரிட்டன் எடுக்கவில்லை. இது பல நிறுவனங்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கார் நிறுவனங்கள் தங்களது வர்த்தகம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளன.

பிரிட்டனில் 2017 ஆம் ஆண்டு 14,000 கார்களை போர்ஷ் விற்றுள்ளது. ஜெர்மனியை அடுத்து அதிக போர்ஷ் கார்கள் விற்பனையாகியது பிரிட்டனில்தான்.

0 Comments

தற்போது 10 சதவிகித உயர்வு அமலுக்கு வந்தால், போர்ஷ் மகான் எஸ்யூவி காரின் விலை 52,880 யூரோவில் இருந்து 58,882 யூரோவாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரக்சிட் நிலையைப் பொறுத்தே பிரிட்டனின் தொழில் வர்த்தகம் நிர்ணக்கப்படும்.  

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.