வெஸ்பா புதிய மாடல் 300 சிசி பைக் அறிமுகம்

வெஸ்பா ஜி.டி.எஸ். 300-பைக்கின் அப்டேட் செய்யப்பட்ட வடிவமாக புதிய பைக் வெளியாகியுள்ளது. முந்தைய மாடலை விட அதிக திறன் கொண்டது என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

View Photos
இந்தியாவில் அறிமுகம் செய்யும் தேதி குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை.

Highlights

  • Vespa GTS 300 - ன் எஞ்சின் திறன் முந்தைய மாடலை விட அதிகம்
  • 24 பி.எச்.பி. மற்றும் 24 என்.எம். திறனை எஞ்சின் அளிக்கிறது
  • ஸ்கூட்டர் மாடல்களில் அதிக திறன் கொண்டது Vespa GTS 300 பைக்

ஸ்கூட்டர் மாடல்களில் அதிக திறன் கொண்ட பைக்கான வெஸ்பா ஜி.டி.எஸ். 300-ன் புதிய மாடல் தற்போ ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2019 வெஸ்பா என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பழைய மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வடிவமாக இதனை கருதலாம். 

278 சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் 23.8 பிஎச்பி மற்றும் 26 என்.எம். திறனை வெளிப்படுத்துகிறது. இது ஸ்கூட்டர் மாடலில் மிகவும் சக்திமிக்க வகையாகும். 

அப்டேட் செய்யப்பட்ட மாடலில் புதிய பிஸ்டன்கள், சிலிண்டர்கள் ஆகியவற்றின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

முந்தைய மாடலில் பெட்ரோலை அதிகம் எடுத்துக்கொள்ளும் என்ற விமர்சனங்கள் இருந்தன. அப்டேட் வெர்ஷனில் இந்த பிரச்னை கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக பியாகியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

புகை வெளியிடுவதில் ஐரோப்பாவை பொறுத்தவரையில் கட்டுப்பாடுகள் விதிகக்ப்பட்டுள்ளன. அவற்ற நிறைவேற்றும் வகையில் வெஸ்பா 300 வடிவமைக்கப்பட்டுள்ளது. 

புதிய எல்.இ.டி. ஹெட்லைட், மாற்றப்பட்ட சீட் அமைப்பு, யு.எஸ்.பி.யில் சார்ஜ் செய்வதற்கான வசதி, ப்ளூடூத்துடன் பைக்கை கனெக்ட் செய்து கொள்ளும் வசதி, நெருக்கடியான பார்க்கிங்கின்போது பைக்கை கண்டுபிடிக்கும் ஆப் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் வெஸ்பா 300-ல் உண்டு.

0 Comments

ஆனால் இந்தியாவில் எப்போது இதனை அறிமுகப்படுத்துவார்கள் என்று கேட்டால் அதற்கு பியாகியோவிடம் பதில் இல்லை. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.