Lamborghini: விற்பனையில் சாதனை படைத்த லம்போர்கினி நிறுவனம்

வி 10 மாடலான கல்லார்டோ (Gallardo) பத்து ஆண்டுகளில் (2003 முதல் 2013 வரை) 14,022 யூனிட்களை விற்றது

View Photos
லம்போர்கினி ஹுராக்கான் காருடன் லம்போர்கினி தொழிலாளர்கள்

வி 10 (V10) மாடலுக்கான புது சாதனையை லம்போர்கினி (Lamborghini) படைத்துள்ளது. சமீபத்திய வி 10 மாடலான லம்போர்கினி ஹுராக்கான் (Lamborghini Huracan) ஐந்து ஆண்டுகளில் 14,022  யூனிட்களை விற்றுள்ளது. இதற்கு முந்தைய வி 10 மாடலான கல்லார்டோ (Gallardo) பத்து ஆண்டுகளில் (2003 முதல் 2013 வரை) 14,022 யூனிட்களை விற்றது. ஹுராக்கன் 2014 ஆம் ஆண்டில் கூபே பதிப்பில் (coupé version) உலக அளவில் அறிமுகமானது, அதைத் தொடர்ந்து ஸ்பைடர் (Spyder) மற்றும் பின்புற சக்கர இயக்கும் பதிப்புகள் அறிமுகமானது. 2017 யில் Performante  மற்றும் 2018  யில் Performante Spyder  ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் புதிய ஹுராக்கன் ஈ.வி.ஓ (கூபே மற்றும் ஸ்பைடர்) அறிமுகப்படுத்தப்பட்டது, இதில் அடுத்த தலைமுறை வி 10 எஞ்சின் இடம்பெற்றுள்ளது. 14,022 வது காரானது கொரிய சந்தைக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் லம்போர்கினி மொத்தம் 4553 கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 96 சதவிகிதம் அதிகமாகும். ஹுராக்கன் 1,211 யூனிட்களைக் கொண்டிருந்தது.  இதில் ஹுராக்கன் பெர்ஃபார்மண்டேவின் (Huracan Performante) காலகட்டத்தில் டெலிவரிகள் மற்றும் புதிய ஹுராக்கன் ஈ.வி.ஓ அறிமுகப்படுத்தப்பட்டது வரை அடங்கும். இதன் முதல் வாடிக்கையாளர் விநியோகங்கள் ஜூன் 2019 இல் தொடங்கியது. எஸ்.வி.ஜே மாடலான வி 12 பிராண்ட் ஐகானான அவென்டடோர் (Aventador)649 யூனிட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

0 Comments

மாடல் வரம்பில் சமீபத்திய அப்டேட் முன் ஆக்ஸலில் ஆறு-பிஸ்டன் நிலையான-காலிபர் பிரேக்குகளும்  உட்புறமாக வென்ட் காஸ்ட் இரும்பு பிரேக் டிஸ்க்குகளும் உள்ளன. பிரேக் டிஸ்க் முன் பக்கத்தில் 360 மில்லிமீட்டரும், பின்புறத்தில் 358 மில்லிமீட்டரும் உள்ளது. பின்புறத்தில் நான்கு பிஸ்டன் பிரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரேக் சிஸ்டத்தின் பிரேக் காலிப்பர்கள் சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளன.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Lamborghini Huracan with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.