Nissan Motor Company: புது தலைமை அதிகாரிகளை நியமித்த நிசான் மோட்டர்ஸ்

Nissan Motor: நிசானின் மூத்த துணைத் தலைவரான ஜுன் செக்கி துணைத் தலைமை இயக்க அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

View Photos
Nissan Motor Company: புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக மாகோடோ உச்சிடாவை நியமித்துள்ளார்

Highlights

  • குப்தா மிட்சுபிஷி மோட்டார்ஸில் தலைமை இயக்க அதிகாரியாக பணியாற்றி வருகிறார்
  • தலைவரான ஜுன் செக்கி துணைத் தலைமை இயக்க அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்
  • ஜனவரி 1, 2020 முதல் தங்களது பணிகளை துவங்குவார்கள்

நிசான் மோட்டார் நிறுவனம் (Nissan Motor Company) தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) மாகோடோ உச்சிடாவை (Makoto Uchida) நியமித்துள்ளது. டோங்ஃபெங் மோட்டார் நிறுவனத்தின் தலைவராக இருப்பதோடு  நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவராகவும் உச்சிடாவ் பணியாற்றி வருகிறார். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், அஸ்வானி குப்தாவை தலைமை இயக்க அதிகாரியாக (சிஓஓ) மற்றும் பிரதிநிதி நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளார். குப்தா மிட்சுபிஷி மோட்டார்ஸில் (Mitsubishi Motors) தலைமை இயக்க அதிகாரியாக (சிஓஓ) பணியாற்றி வருகிறார். நிசானின் மூத்த துணைத் தலைவரான ஜுன் செக்கி துணைத் தலைமை இயக்க அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

0 Comments

இந்த நியமனங்கள்  குறித்து இயக்குநர்கள் குழுவின் தலைவர் யசுஷி கிமுரா கூறுகையில், "வணிகத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான சரியான தலைவர் உச்சிடா என்று குழு முடிவு செய்துள்ளது. நிசானின் நியமனக் குழு நியமனச் செயற்பாட்டிற்கு தலைமை தாங்கியதுடன், புதிய மூன்று பேரையும் முழுமையாக மதிப்பீடு செய்தது. மூன்று பேர் கொண்ட நிர்வாக குழு அமைப்பு ஜூன் மாதத்தில் துவங்கப்பட்டது. உச்சிடா நிறுவனத்தை ஒரு குழுவாக வழிநடத்துவார். மேலும் அவர் உடனடியாக வணிகத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தி நிறுவனத்தை வளர்ச்சியை நோக்கி நகர்த்துவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தங்களது முழு அனுபவம் மற்றும் திட்டங்களை புதிய சிஓஓ விற்கு குப்தா மற்றும் சேக்கி வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.  உச்சிடா மற்றும் குப்தா இருவரும் ஜனவரி 1, 2020 முதல் தங்களது பணிகளை துவங்குவார்கள்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.