விலை ஏறும் நிசான் நிறுவன கார்கள்..!

மஹிந்திரா, டாடா மோட்டர்ஸ், ரினால்ட் ஆகிய நிறுவனங்களும் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளன

View Photos
ஏப்ரல் மாதம் முதல் நிசான் கார்களின் விலை உயருகிறது

Highlights

  • கடந்த ஆண்டு புது பொழிவுடன் அறிமுகம் செய்யப்பட்டது
  • நான்கு சதவிகிதம் வரை விலை உயரவுள்ளது
  • இந்த இரண்டு கார்களுக்கு மட்டுமே விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது

வரும் ஏப்ரல் மாதம் முதல் நிசான் நிறுவனம் கார்களின் விலை உயர உள்ளன. ஏற்கெனவே மஹிந்திரா, டாடா மோட்டர்ஸ், ரினால்ட் ஆகிய நிறுவனங்கள், தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளன. அதனைத் தொடர்ந்து நிசான் நிறுவனமும் தனது கார்களான தட்சன் கோ (Datsun GO) மற்றும் கோ+ (GO+) விலையை ஏப்ரல் மாதம் முதல் உயர்த்துகிறது.

நிசான் மோட்டர்ஸ் இந்தியாவின் விற்பனைப் பிரிவு தலைவரான ஹர்தீப் சிங் பிரார் கூறுகையில், ‘ஜப்பானிய தொழில்நுட்பம் மூலம் சிறந்த கார்களை அறிமுகம் செய்வதில் நிசான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது. பல மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தால்தான் எங்கள் கார்களின் விலையையும் உயர்த்த உள்ளோம்' என்றார்.

0 Comments

தட்சன் கோ (Datsun GO) மற்றும் கோ+ (GO+) கார்களை நிசான் நிறுவனம் சென்ற ஆண்டு சில மாற்றங்கள் உடன் அறிமுகம் செய்தது. மெக்கானிக்கலாக 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் வரும் இது, 67 BHP மற்றும் 104 என்எம் உச்சபட்ச டார்க் சக்தியைப் பெற்றுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.