சென்னை சாலையில் வலம்வந்த ராயல் என்ஃபீல்டின் அடுத்த இறக்குமதி..!

மெக்கானிக்கலாக பின் சக்கரத்தின் வலது புறத்தில் அமைந்திருந்த டிஸ்க்-பிரேக், தற்போது இடது புறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது

View Photos
அடுத்த ஆண்டு முதல் வெளியிடப்படும் ராயல் என்ஃபீல்டு மாடல் வண்டிகளில், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மற்றும் இரு சக்கரத்துக்குமான ஏ.பி.எஸ் பிரேக் சிஸ்டம் அமைப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.  

Highlights

  • New Royal Enfield Classic BS-VI spotted testing
  • Upcoming Royal Enfield Classic to get dual-channel ABS
  • Final drive moved to left side, fuel-injected engine to meet BS-VI norms

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது மிகவும் பிரபலமான ‘க்ளாசிக்' மாடல் பைக்கின் அடுத்த வெர்ஷனை வெளியிட தயாராகி வருவது போலத் தெரிகிறது. ‘தண்டர்பர்டு' இரு சக்கர வாகனத்தின் அடுத்த வகையையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சீக்கிரமே சந்தைக்குக் கொண்டு வரும் எனத் தெரிகிறது. இந்த இரு வாகனங்களின் அடுத்த ஜெனரேஷன் வெர்ஷன்கள் சென்னை சாலையில் சோதனை செய்யப்பட்டுள்ளன. அதன் நிழற்படம் தற்போது கிடைத்துள்ளது.

இந்த புதிய மாடல்களின் வடிவமைப்புகளில் பல மாற்றங்கள் இருப்பதும், அப்கிரேடுகள் இருப்பதும் புகைப்படம் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.

68lmdlus

புதிய பைக்கில் பி.எஸ்-4 அமைப்பு இருக்கும்

அதில் முக்கியமானது இரு சக்கர வாகனத்தின் டெயில் விளக்கு. இந்த விளக்கு முன்னர் இருந்தது போல் அல்லாமல், ஒரு சின்ன சிலிண்டர் வடிவில் வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது. 

மெக்கானிக்கலாக பின் சக்கரத்தின் வலது புறத்தில் அமைந்திருந்த டிஸ்க்-பிரேக், தற்போது இடது புறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் ஏ.பி.எஸ் பிரேக் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த பைக்கில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மற்றும் பி.எஸ்-4 அமைப்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஏப்ரல் 2020 முதல் இந்த பைக்குகள் விற்பனைக்கு வரும்போது, அது குறித்து முழுமையான தகவல்கள் தெரிந்துவிடும். 

boa3e9t

பைக்கின் டெயில் விளக்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

அடுத்த ஆண்டு முதல் வெளியிடப்படும் ராயல் என்ஃபீல்டு மாடல் வண்டிகளில், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மற்றும் இரு சக்கரத்துக்குமான ஏ.பி.எஸ் பிரேக் சிஸ்டம் அமைப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.  

0 Comments

படம்: Vikatan.com

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.