2020-ல் புதிய ‘மகிந்திரா ஸ்கார்பியோ’… படங்கள் உள்ளே!

2.0 லிட்டர் இஞ்சின் மூலம் புதிய ஸ்கார்பியோ இயங்கும். மேலும் புதிய ஸ்கார்பியோ சந்தைக்கு வரும்போது, அதன் பெட்ரோல் வகையும் அறிமுகம் செய்யப்படலாம். ​

View Photos
ஸ்கார்பியோ-வின் இந்த புதிய வகையில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் எனவும் 2020-ல் அது சந்தைக்கு வரும் எனவும் சொல்லப்படுகிறது. 

Highlights

  • காரின் உட்புறத்தில் பல மாற்றங்கள் இருக்கலாம்
  • 2020-ல் இந்த கார் சந்தைக்கு வரும்
  • 2.0 லிட்டர் இஞ்சின் மூலம் இந்த கார் இயங்கும்

2020 ஆம் ஆண்டு மகிந்திரா நிறுவனம், நிறைய எஸ்.யூ.வி ரக கார்களை சந்தையில் இறக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு சான்றாக தற்போது சில படங்கள் கிடைத்துள்ளன. மகிந்திரா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் மிகவும் பிரபல காரான ‘தார்', இந்த மாதத் தொடக்கத்தில் சாலைகளில் பயணம் செய்ததைப் பார்க்க முடிந்தது. இந்நிலையில் மிகவும் பிரபலமான ‘ஸ்கார்பியோ' காரின் சில புகைப்படங்கள் தற்போது லீக் ஆகியிருக்கின்றன. ஸ்கார்பியோ-வின் இந்த புதிய வகையில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் எனவும் 2020-ல் அது சந்தைக்கு வரும் எனவும் சொல்லப்படுகிறது. 

detn3o

2020 ஸ்கார்பியோவில் பல மாற்றங்கள் இருக்குமாம்.

அந்தப் படங்களை வைத்துப் பார்க்கும் போது புதிய ஸ்கார்பியோவில, ரூஃப்லைன் சற்று கீழே இருக்கும் எனத் தெரிகிறது. விண்டு ஷீல்டு மற்றும் வீல் ஆர்ச்சுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

காரின் உட்புறத்தைப் பொறுத்தவரை, புதிய ஸ்கார்பியோ முழு மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிகிறது. 

மொத்தமாக காரின் உறுதித் தன்மை இன்னும் சிறந்ததாக இருக்கும் எனத் தெரிகிறது. அதைப் போலவே உட்புறத்தில் இருக்கும் டச்-ஸ்க்ரீன் டிஸ்ப்ளேவும் பெரிதாக இருக்கலாம். பல செயல்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையிலான ஸ்டீயரிங் வீலும் இந்த ஸ்கார்பியோவில் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

8ijg5mu

பி.எஸ்-6 மூலம் இந்த ஸ்கார்பியோ பவரூட்டப்படுமாம்

0 Comments

பி.எஸ்-6 மூலம் இந்த ஸ்கார்பியோ பவரூட்டப்படுமாம். 2.0 லிட்டர் இஞ்சின் மூலம் புதிய ஸ்கார்பியோ இயங்கும். மேலும் புதிய ஸ்கார்பியோ சந்தைக்கு வரும்போது, அதன் பெட்ரோல் வகையும் அறிமுகம் செய்யப்படலாம். 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.