மஹிந்திரா மராசோ காரின் சிறப்பம்சங்கள் - ஓர் விரிவான அலசல்

டாடா ஹெக்ஸா, இனோவா கீரிஸ்டா, சுசூக்கி எர்டிகா போன்ற கார்களுடன் சந்தையில் போட்டியிட இருக்கிறது

View Photos

மஹிந்திராவின் மராசோ எம்.பி.வி கார், 9.9 லட்சம் ரூபாய்க்கு நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. டாடா ஹெக்ஸா, இனோவா கீரிஸ்டா, சுசூக்கி எர்டிகா போன்ற கார்களுடன் சந்தயில் போட்டியிட இருக்கிறது.

இப்போது மராசோவின், சிறப்ப அம்சங்கள் பற்றி விவரமாக பார்க்கலாம்.

Mahindra Marazzo

12.31 Lakh * On Road Price (New Delhi)
Mahindra Marazzo

4ovs227

வெளிப்புற வடிவமைப்பு:

மராசோவின் வடிவமைப்புக்கு மஹிந்திரா நிறுவனம் 200 மில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது. ஆக்ரோஷமான வடிவமைப்பு பெற்றுள்ளது. மராசோ என்றால் சுறா என்று பொருள். அதற்கு ஏற்றபடி, சுறாவை மையப்படுத்தி இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. மராசோவின் முன் பகுதியில், குரோம் டூத்ட் கிரில் கொடுக்கப்பட்டிருக்கிறது. பைலட் லைட்களுடன் கூடிய முகப்பு விளக்கு மற்றும் சுறாவின் கண் போன்ற வடிவமைப்பைக் கொண்ட ஃபாக் லாம்பும் எல்.இ.டி டிஆர்எல் லைட்டும், சுறாவை பிரதிபலிக்கிறது.

3s8h5kog

இன்டீரியர் வடிவமைப்பு:

மஹிந்திரா மராசோ 7 மற்றும் 8 சீட்டர் காராக வெளியாகியுள்ளது. 7 சீட்டர் காரில் இரண்டாம் வரிசையின் மத்தியில் கேப்டன் சீட் உள்ளது. 8 சீட்டரில், மடக்கக் கூடிய பென்ச் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கேபினின் லுக், ப்ரீமியமாக இருக்கிறது. வெள்ளை நிறத்தில் டூயல் டோன் கொண்ட நிறம் கொடுக்கப்படுள்ளது. டெஷ்போர்டு வெள்ளை நிறத்திலும், கிளாஸியான மத்திய பேனலும் இருக்கிறது. ஏசி வென்ட்டுகளுக்கு குரோம் வடிவமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

go266npo

சிறப்பம்சங்கள்:

டச் ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இரண்டு யூ.எஸ்.பி போர்ட், ப்ளூடூத், ஆக்ஸ் - இன் போர்ட், டூயல் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ட்ரோல், ரூஃபில் அமைக்கப்பட்டுள்ள ஏசி வென்ட் ஆகியவையும் இருக்கின்றன. இந்த ஏசி, முதல் சரவ்ண்டு கூல் தொழில் நுட்பம் கொண்டது என மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது. ஆடியோ மற்றும் மொபைல் கன்ட்ரோல் கொண்ட மூன்று ஸ்போக் ஸ்டீரிங், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் கிளைமேட் கன்ட்ரோலும் உள்ளது.

6pp0nsmo

மராசோவில் பவர் விண்டோ, சென்ட்ரல் லாக்கிங், ஓட்டுநருக்கான தகவலமைப்பு ஆகிய, கூடுதல் அம்சங்கள் இருக்கின்றன. பாதுகாப்பு என்று வருகையில் இரண்டு ஏர் பேக்குகள், இ.பி.டியுடன் கூடிய ஏ.பி.எஸ் பிரேக், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக், ஐஎஸோ ஃபிக்ஸ், அதிவேக பயணத்தின் போது எச்சரிக்கை போன்றவை இடம் பெற்றுள்ளன. பின்புற கேமரா சென்சார் அம்சமும் இதில் இருக்கிறது.

6op6v0j8

இன்ஜின்:

மராசோ லிட்டருக்கு 17 கி.மீ மைலேஜ் தருகிறது. புதிய 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் இந்த மராசோவில் இருக்கிறது. 121பி.எச்.பி பவரை கொடுக்கும் திறன் கொண்டது. 300 என்.எம் டார்க்கும் கொடுக்கிறது. 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே இருக்கிறது. ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இப்போதைக்கு கொடுக்கப்படவில்லை. பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டு வர மஹிந்திரா பணி செய்து வருகிறது. 2020-ம் ஆண்டு பி.எஸ் 6 வகை மாடலாக களம் இருக்கும் என்று தெரிகிறது.

4k98ca6g

சந்தையில் நிலவும் போட்டி:

0 Comments

டாடா ஹெக்ஸா, இனோவா கீரிஸ்டா, சுசூக்கி எர்டிகா போன்ற கார்களுடன் சந்தயில் போட்டியிட இருக்கிறது. இந்த பட்டியலில் எர்டிகா மிகக் குறைந்த விலை கார். மராசோ ஹெக்ஸா மற்றும் இனோவா உடன் நேரடியாக மோதுகிறது. இந்த விலைக்கு 7 மற்றும் 8 சீட்டர்கள் கொண்ட மராசோ தரும் இட வசதி மிகப் பெரியது. இந்த செக்மென்டில் இந்த விலைக்கு இப்படி ஒரு இட வசதி தரும் கார் வேறெதுவும் இல்லை.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Mahindra Marazzo with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.