பஜாஜ் CT110 பைக் இந்தியாவில் அறிமுகம் முழு விவரங்கள் உள்ளே...!

130 mm ட்ரம் பிரேக், டெலேஷ்கோபிக் போர்க் பெற்றுள்ள இது மூன்று வண்ணங்கள் வருகிறது

View Photos
புது மாற்றங்களுடன் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்லது

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புது பைக்கை அறிமுகம் செய்துள்ளது. 110 சிசி பைக்கான பஜாஜ் CT110 37,997 ரூபாயாக நிர்ணைக்கப்படுகிறது. எலக்ட்ரிக் ஸ்டார்ட் வகையானது 44,480 ரூபாயாக நிர்ணைக்கப்பட்டுள்ளது. பழைய CT பைக்குகளை ஒப்பிடும் போது இந்த பைக்கில் சில மாற்றங்கள் உள்ளன.

கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ், பெரிய கிராஷ் கார்த் (Crash guard), ரப்பர் கண்ணாடி கவர்கள் என மாற்றங்களுடன் இந்த பஜாஜ் CT110 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிட்டிகளை விட கிராமப்புறங்களில் இந்த பைக் அதிகம் விற்பனையாகும் என எண்ணப்படுகிறது.

4jsbeb5

இரண்டு வகைகளில் இந்த பைக் கிடைக்கும்

மோட்டர்சைக்கிள் பிசினஸ் பிரிவின் தலைவரான சாரங் கனடே கூறுகையில், ‘நியாயமான விலையில் சிறந்த பைக்கை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு தான் இந்த CT வகை பைக். இந்நாள் வரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த CT பைக்குகளை ஓட்டுகிறார்கள். புது தொழிற்நுட்பம் மற்றும் ஸ்டைலை இந்த புது CT பைக்கில் அறிமுகம் செய்துள்ளோம். மைலேஜ் மற்றும் பவரில் மக்களை இந்த பைக் கவரும் என எண்ணுகிறோம்' என்றார்.

kupe6mp8

ஹீரோ HF டான், டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக இது கருதப்படுகிறது

மெக்கானிக்கலாக 115 சிசி DTS-i சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்ட் இன்ஜின் பெற்றுள்ள இது 8.4 bhp பவரையும் 5000 rpm யில் 9.81 Nm உட்ச டார்க்கையும் பெறுகிறது. நீளமான சீட் வழங்கப்பட்டுள்ளதால் ஓட்டுநர்களுக்கு இது வசதியாக கருதப்படுகிறது.

0 Comments

130 mm ட்ரம் பிரேக், டெலேஷ்கோபிக் போர்க் பெற்றுள்ள இது மூன்று வண்ணங்கள் வருகிறது. பஜாஜ் ஆட்டோ டீலர்ஷிப்களில் கிடைக்கும் இந்த பைக்கானது ஹீரோ HF டான், டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக கருதப்படுகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.