Price Hike: கேடிஎம் நிறுவன பைக்குகளின் விலை உயர்த்தப்பட்டது

KTM: இளைஞர்கள் இடையே கேடிஎம் 125 டியூக் பைக் அமோக வரவேற்பை பெற்று ஏனைய கேடிஎம் பைக்குகளை விட அதிகமாக விற்பனையானது

View Photos
KTM: இந்த இரண்டு பைக்கிலும் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உள்ளது

Highlights

  • 125 டியூக் பைக் நவம்பர் 2018 அறிமுகம் செய்யப்பட்டது.
  • கேடிஎம் 125 டியூக் பைக்கின் விலை 2,248 ரூபாய் உயர்த்தப்பட்டது
  • கேடிஎம் RC 125 பைக்கின் விலையும் 1,537 ரூபாய் உயர்த்தப்பட்டது

KTM நிறுவனம் தங்களது பைக்குகளான 125 Duke மற்றும் RC 125 ஆகியவற்றின் விலையை இந்தியாவில் உயர்த்தியுள்ளது. கேடிஎம் 125 டியூக் பைக்கின் விலை 2,248 ரூபாய் உயர்ந்து தற்போது 1,32,500 ரூபாயாக உள்ளது. அதே போல் கேடிஎம் RC 125 பைக்கின் விலையும் 1,537 ரூபாய் உயர்ந்து 1,48,750 ரூபாயாக உள்ளது.

இந்தியாவில் 125 டியூக் பைக் 1.18 லட்சம் ரூபாய்க்கும் RC 125 பைக் 1.47 லட்சம் ரூபாய்க்கும் அறிமுகம் செய்யப்பட்டது. 125 டியூக் பைக் நவம்பர் 2018 யிலும் RC 125 பைக் ஜூன் 2019 யிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

see1361s

The KTM 125 Duke is the near perfect beginner's bike, even though it may be considered slightly expensive

மெக்கானிக்கலாக இந்த இரண்டு பைக்கிலும் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உள்ளது. அது 14.3 bhp பவரையும் 12Nm உட்ச டார்க்கையும் தருகிறது. இதில் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உள்ளது. பிரேக்களுக்கு 300 mm டிஸ்க் முன்பக்கத்திலும் 230 mm டிஸ்க் பின்பக்கத்திலும் உள்ளது. Bosch சிங்கிள் ஏபிஎஸ், ஆர்எல்எம் ஆகியவை இந்த பைக்கில் வருகிறது.

0 Comments

கேடிஎம் நிறுவனத்தில் அதிக வரவேற்பை பெற்றவை இந்த பைக்குகள். அந்த நிறுவனத்தின் குறைவான விலையில் விற்கபட்ட பைக்குகள் இவை. இளைஞர்கள் இடையே கேடிஎம் 125 டியூக் பைக் அமோக வரவேற்பை பெற்று ஏனைய கேடிஎம் பைக்குகளை விட அதிகமாக விற்பனையானது. இதனால் தான் கேடிஎம் நிறுவனம் RC 125 பைக்கை அறிமுகம் செய்தது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.