Mercedes-Benz India: விழாகால விற்பனையில் சாதனை படைத்த மெர்சிடிஸ் பென்ஸ்

Mercedes-Benz: இந்த விழா கால விற்பனையானது மெர்சிடிஸ் பென்ஸ் நான்காவது காலாண்டில் சாதனை விற்பனை செய்வதை காட்டும்

View Photos
Mercedes-Benz: சி-கிளாஸ் மற்றும் ஈ-கிளாஸ் ஆகியவை மும்பையில் வாடிக்கையாளர்களின் டாப் தேர்வாக இருந்தன

இந்தியாவில் இது பண்டிகை காலம். வெகு மாதங்களாக வீழ்ச்சியில் இருக்கும் ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனங்கள் இந்த பண்டிகை கால விற்பனையையே நம்பியுள்ளது. பண்டிகை காலங்களில் தசரா மற்றும் நவராத்திரி ஆகியவற்றின் போது மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா(Mercedes Benz India) 200+ கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி சாதனை படைத்துள்ளது. பண்டிகை கால விற்பனையில் சென்ற ஆண்டு சாதனையை முறியடித்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ். மும்பை (Mumbai) மற்றும் குஜராத் (Gujarat) மாநிலத்தில் இருந்து தான் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளன. மும்பையில் 125 க்கும் மேற்பட்ட கார்களும், குஜராத்தில் 74 கார்களும் விற்பனையாகியுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் எம்.டி. மற்றும் சிஇஓ மார்டின் ஸ்வெங்க் கூறுகையில் ‘ஆட்டோமொபைல் துறையின் முக்கியமான சந்தைகளில் முக்கியமானது இந்தியா. 2018 ஆண்டை போன்றே இந்த ஆண்டும் எங்கள் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பை தந்துள்ளனர். அது எங்களுக்கு சாதகமான வளர்ச்சியாகும். இந்தியாவில் எங்கள் வெற்றிக்கு எங்கள் வாடிக்கையாளர்கள்தான் காரணம், அவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு எங்களது நன்றி'  என்றார்.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் சி-கிளாஸ் (C-Class) மற்றும் ஈ-கிளாஸ் (E-Class) ஆகியவை மும்பையில் வாடிக்கையாளர்களின் டாப் தேர்வாக இருந்தன.  அதைத் தொடர்ந்து ஜி.எல்.சி (GLC) மற்றும் ஜி.எல்.இ எஸ்யூவிகளும் (GLE SUV) உள்ளன. குஜராத்தில், மெர்சிடிஸ் பென்ஸின் சி.எல்.ஏ (CLA), ஜி.எல்.ஏ (GLA) மற்றும் சி-கிளாஸ் (C-Class) ஆகியவை பிரபலமான தேர்வுகளாகத் இருக்கின்றன. 47 நகரங்களில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமானது  94 விற்பனை நிலையங்களில் இயங்குகிறது. மெர்சிடிஸ் தனது ‘வாடிக்கையாளர்களை அணுகு' என்ற திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கலை வெகுவாக கவர்கிறது.

0 Comments

இந்த விழா கால விற்பனையானது மெர்சிடிஸ் பென்ஸ் நான்காவது காலாண்டில் சாதனை விற்பனை செய்வதை காட்டும். ஆடம்பர கார் தயாரிப்பாளர்களும் கடந்த மாதங்களில் சரிவைக்  கண்டன. விழா கால விற்பனையானது ஆட்டோமொபைல் துறைக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Mercedes-Benz G-Class with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.