வருகிறது மாசெராட்டியின் புது ஸ்போர்ட்ஸ் கார்!

மாசெராட்டி நிறுவனத்தின் சி.இ.ஓ ஹர்லார்டு ஜெ.வெஸ்டர் மாடெனாவின் மேயர் கியன் கர்லோவை சந்தித்து பேசினார்

View Photos
புது ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்புக்காக புதிய ப்ளாட்ஃபார்ம் உருவாக்கப்பட்டுள்ளது

ஸ்போர்ட்ஸ் ரக கார்களை தயாரிப்பதில் பெயர் பெற்றது மாசெராட்டி. மாசெராட்டியின் தயாரிப்பு ஆலைகளில் முக்கியமானது இத்தாலியின் மாடெனாவில் இருக்கும் தயாரிப்பு ஆலையாகும். இந்த ஆலையானது 1939 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் மாசெராட்டி நிறுவனத்தின் சி.இ.ஓ ஹர்லார்டு ஜெ.வெஸ்டர் மாடெனாவின் மேயர், கியன் கர்லோவை சந்தித்துப் பேசினார். அதில் மாடெனாவில் உள்ள மாசெராட்டியின் ஆலையைக் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மாடெனா ஆலையில் புதிய தயாரிப்பு ப்ளாட்ஃபார்ம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புது தயாரிப்பு ப்ளாட்ஃபார்மில் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது. இதன் தயாரிப்பு அடுத்த ஆண்டின் முதல் பகுதியில் துவங்கும்.

0 Comments

மாசெராட்டி நிறுவனமானது எப்.சி.ஏ (FCA) கீழ் இயங்குவதாகும். 2018 முதல் 2022 வரையிலான காலத்தில் மாடெனா ஆலையில் 5 பில்லியன் யூரோ முதலீடு செய்யவுள்ளது எப்.சி.ஏ. இதன் மூலம் பல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.