New Cars and Bikes in India

மாருதி சூசுகி நிறுவனத்தின் மேலும் ஒரு சாதனை..!

பாதுகாப்பு அம்சங்களில் விட்டாரா பிரிஸா 4 ஸ்டார் பெற்றது

View Photos
சராசரியாக மாதம் 14,675 விட்டாரா பிரிஸா கார்கள் விற்பனையாகின்றன

மாருதி சூசுகி நிறுவனத்தின் விட்டாரா, எஸ்.யூ.வி கார் பிரிவில் அதிகம் விற்ற கார் என்ற சாதனையைப் படைத்துள்ளது. அறிமுகம் செய்ததில் இருந்து இதுவரை 4 இலட்சம் விட்டாரா பிரிஸா கார்கள் விற்று சாதனைப் படைத்துள்ளது மாருதி சூசுகி.

maruti suzuki vitara brezza sales

டீசல் வகையில் மட்டுமே இந்த கார் சந்தையில் கிடைக்கிறது 

சராசரியாக மாதம் 14,675 விட்டாரா பிரிஸா கார்கள் விற்பனையாகின்றன. சமீபத்தில் நடந்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களில் விட்டாரா பிரிஸா 4 ஸ்டார் பெற்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த விட்டரா பிரிஸா, டீசல் வகையில் மட்டுமே கிடைக்கிறது.

pncpaqa8

விட்டாரா பிரிஸா பாதுகாப்பு அம்சங்களுக்காக 4 ஸ்டார் பெற்றது 

மாருதி சூசுகி நிறுவனத்தின் கல்சி கூறுகையில், ‘மூன்று ஆண்டுகளில் நான்கு இலட்ச கார்கள் விற்றுள்ளது என்றால், அது எங்கள் நிறுவனத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. அவர்களுக்கு எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.

6dorsg8g

விட்டாரா பிரிஸாவின் போட்டியாக டாடா நேக்சன் கார் உள்ளது

விட்டாரா பிரிஸா காரின் போட்டியாக டாடாவின் நேக்சன் கருதப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் வகையில் வரும் டாடா நேக்சன், பாதுகாப்பு அம்சங்களில் 5 ஸ்டார் பெற்றுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்குள் 50,000 கார்களை விற்றுள்ளது டாடா நேக்சன்.

0e0fn4j

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 அதிரிபுதிரி ஹிட் ஆகியுள்ளது

0 Comments

ஃபோர்டு நிறுவனமும் தங்களது எக்கோ ஸ்போர்ட் காரை டிசைன் மாற்றங்களுடன் மறு அறிமுகம் செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 300 கார் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று ஆண்டுகளில் நான்கு இலட்ச கார்கள் விற்ற மாருதி சூசுகி விட்டாராவின் சாதனையை மஹிந்திரா எக்ஸ்யூவி 300 முறியடிக்குமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.