Maruti Suzuki S-Presso : இந்தியாவில் எப்போது அறிமுகம் தெரியுமா?

இந்த காரின் விலை 3.5 லட்சம் ரூபாயாக இருக்கும் என எண்ணப்படுகிறது.

View Photos
The Maruti Suzuki S-Presso : இது ஒரு ஹாட்ஸ்பேக் காராகும்

மாருதி சூசுகி Future S மாடலை 2018 Auto Expo வில் அறிமுகம் செய்தது. அதன் S – Presso காரானது இந்தியாவில் அக்டோபர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த கார் தான் மாருதி சூசுகி நிறுவனத்தின் முதல் SUV மாடல் ஹாட்ஸ்பேக் ஆகும். ரினால்ட் கிவிட், டத்சன் ரெடி-கோ கார்களுக்கு போட்டியாக இந்த புது கார் அறிமுகம் செய்யப்படுகிறது.

Maruti Suzuki S-Presso

4.09 Lakh * On Road Price (New Delhi)
Maruti Suzuki S-Presso

மாருதி சூசுகி நிறுவனத்தின் புது கார்கள் பல, Heartect என்னும் பிளாட்பார்மில் தயாரிக்கப்படுகிறது. ஆல்டோ, வாகன் ஆர் கார்களில் இருக்கும் உட்புற டிசைன்கள் இந்த காரில் இருக்க வாய்ப்புள்ளது.

மெக்கானிக்கலாக 1.0 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் பெற்றுள்ள இந்த காரானது BS6 கீழ் வரும். 67 bhp பவரையும் 90 Nm உட்ச டார்க்கையும் பெற்றுள்ள இந்த காரில் 5 ஸ்பிட் மானுவல், ஏஎம்டி யூனிட் உள்ளது. ஆல்டோ கே10 காரில் உள்ளது போல் ஒரு லிட்டருக்கு 24-25 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் பெற்றுள்ளது இந்த புது கார்.

0 Comments

இந்த காரின் ஏனைய விவரங்கள் வெளியாகவில்லை. இந்த காரின் விலை 3.5 லட்சம் ரூபாயாக இருக்கும் என எண்ணப்படுகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Maruti Suzuki S-Presso with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.