Maruti Suzuki: 10,000 புக்கிங்கை கடந்த எஸ்-பிரஸ்ஸோ கார்...!

Maruti Suzuki S-Presso: அறிமுகமாகி 11 நாட்களில் 10,000 புக்கிங் பெற்று சாதனை படைத்துள்ளது இந்த கார்.

View Photos
Maruti Suzuki S-Presso: இந்த கார் மாருதி சூசுகியின் புது காராகும்

Highlights

  • காரின் விலை 3.69 லட்சம் ரூபாய் முதல் 4.94 லட்சம் ரூபாய் வரை உள்ளது
  • இந்த காரில் BS 6 க்கு ஏற்ற 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருக்கும்.
  • அதிகபட்சமாக 67 bhp பவரை தரும்

இந்தியாவின் முக்கிய கார் நிறுவனமான மாருதி சூசுகி சமீபத்தில் மைக்ரோ எஸ்யூவி ஹாட்ஸ்பேக் (Micro-SUV Hatchback) பிரிவில் தனது புதிய காரான எஸ்-பிரஸ்ஸோவை (S-Presso) அறிமுகம் செய்தது. அறிமுகமாகி 11 நாட்களில் 10,000 புக்கிங் பெற்று சாதனை படைத்துள்ளது இந்த கார். இந்த காரின் விலை 3.69 லட்சம் ரூபாய் முதல் 4.94 லட்சம் ரூபாய் வரை நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி: மாருதி சுசுகியின் குறிப்பிட்ட சில மாடல் கார்களுக்கு அதிரடி விலை குறைப்பு!

3o1ulu7g

Maruti Suzuki S-Presso: மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த கார்

மெக்கானிக்கலாக இந்த காரில் BS 6 க்கு ஏற்ற 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருக்கும். அது அதிகபட்சமாக 67 bhp பவரை தரும். 5 ஸ்பீடு வசதி கொண்ட இந்த காரில் மானுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இருக்கும்.

டெக்னிக்கலாக கருப்பு நிற பம்பர், சி- டிசைன் டெயில்லைட், 14 இன்ச் சக்கரம், ORVM, சில்வர் நிற முன்பக்க க்ரில் ஆகியவை உள்ளது. காரின் உள்ளே கருப்பு டாஸ்போர்ட், முன்பக்க பவர் விண்டோ, இரட்டை ஏர்பேக் ஆகிய அம்சங்கள் பெற்றுள்ளது எஸ்-பிரஸ்ஸோ. ஐந்து பேர் அமர கூடிய இடவசதி கொண்டது இந்த கார்.

மேலும் வாசிக்க: விற்பனையில் 70 சதவிகிதம் BS 6 கார்கள்...!

4crda2po

இந்த காரின் கேபின் அட்டகாசமாக உள்ளது

0 Comments

மாருதி சுசுகி தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்-பிரஸ்ஸோவில் வழங்கும் துணை கிட் தேர்வு செய்வதை எளிதாக்குகிறது. நிறுவனம் 'எனர்ஜெடிக்' மற்றும் 'எக்ஸ்பெடிஷன்' ஆகிய இரண்டு தொகுப்புகளை வழங்குகிறது. எல்இடி பகல்நேர இயங்கும் விளக்குகள், கிரில்லுக்கான குரோம் அழகுபடுத்தல்கள் முதலியனவற்றைத் தேர்வுசெய்ய வாய்ப்புகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மாருதி நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் சிறிய கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Maruti Suzuki S-Presso with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.