400வது ‘அரேனா’ ஷோ-ரூம் திறந்த மாருதி சூசுகி நிறுவனம்!

மாருதி சூசுகி நிறுவனம், தனுத 400வது ‘அரேனா’ (Arena) ஷோ-ரூமை திறந்துள்ளது.

View Photos
2 ஆண்டுகளில் இந்த சாதனையை அந்த நிறுவனம் புரிந்துள்ளது

மாருதி சூசுகி நிறுவனம், தனுத 400வது ‘அரேனா' (Arena) ஷோ-ரூமை திறந்துள்ளது. 2 ஆண்டுகளில் இந்த சாதனையை அந்த நிறுவனம் புரிந்துள்ளது. மாருதி சூசுகி அரேனா ரீடெய்ல் ஷோ-ரூம், இந்தியாவில் 278 நகரங்களில் இருக்கிறது. 

இது குறித்து அந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் & விற்பனைப் பிரிவு, எக்சிக்யூடிவ் இயக்குநர் ஷாசங்க் ஸ்ரீவஸ்தவா, “நாங்கள் மாருது சுசூகி அரேனா ஷோ-ரூம்களை எங்களுடைய இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆரம்பித்தோம். நாங்கள் புதுமையான விஷயத்துக்கு மாறுவதைத்தான் இது காட்டுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளேயே நாங்கள் 400 அரேனா ஷோ-ரூம்களை திறந்துள்ளோம். 

maruti suzuki arena new showroom

மாருதி சுசூகி அரேனா ஷோ-ரூம்களில் பல அதிநவீன வசதிகள் இருக்கும்

தொடர் ஆய்வு, வாடிக்கையாளர்களின் தேவைகளை தொடர்ந்து கேட்டறிவது, எதிர்காலத்தில் என்ன தேவைப்படும் என்பதை ஆராய்தல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தியதன் மூலம் இதைச் செய்துள்ளோம். சர்வதேச சந்தைக்கு ஏற்றவாறு நாங்கள் இந்த ஷோ-ரூம்களை வடிவமைத்துள்ளோம்” என்று விளக்கம் கொடுத்துள்ளார். 

0 Comments

அரேனா ஷோ-ரூம்களில், அதி நவீன சாதனங்கள் இருக்கும். டச்-ஸ்க்ரீன் மூலம் வாகனங்களில் சிறப்பம்சங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வசதி செய்து தரப்பட்டிருக்கும். சில கார்களின் 360 கோண சிறப்பம்சங்களையும் இந்த டச்-ஸ்க்ரீன் சாதனம் மூலம் தெரிந்து கொள்ள முடியும். விரைவில் நாட்டில் இருக்கும் அனைத்து மாருதி சூசுகி ஷோ-ரூம்களும் அரேனா ஷோ-ரூமில் இருப்பது போல வசதிகள் பெற்றிருக்கும்படி நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.