முடிவுக்கு வந்தது 34 ஆண்டுகள் வரலாறு கொண்ட கார்..!

800 மற்றும் ஆம்னி காருகளுக்குப் பின் மாருதி நிறுவனம் அறிமுகம் செய்தது ஜிப்ஸியைத்தான்.

View Photos
மிக நீண்ட வரலாறு உடையது இந்த ஜிப்ஸி கார்

Highlights

  • 1985 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது மாருதி ஜிப்ஸி
  • இதன் விலை 6.22 லட்சம் ரூபாயாகும்
  • இதன் ஆடர்களை இப்போது டீலர்கள் ஏற்பதில்லை

1985 ஆம் ஆண்டு முதல் இன்று வரை விற்பனையாகும் மிக நீண்ட வரலாறுடையது மாருதி சூசுகி எஸ்.யூ.வி யான ஜிப்ஸி. 34 ஆண்டுகளுக்குப் பின், இந்த ஜிப்ஸியின் தயாரிப்பு முடிவுக்கு வருகிறது.

மாருதி சூசுகி நிறுவனம், தனது டீலர்ஷிப்களுக்கு இனி ஜிப்ஸி காரின் ஆடர்களை ஏற்க வேண்டாம் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஜிப்ஸி காரின் தயாரிப்பு முடிவுக்கு வருவதாக மாருதி சூசுகி தெரிவித்துள்ளது.

7gc4lhv8

மாருதி அறிமுகம் செய்த மூன்றாவது கார் இது தான்

சர்வதேச அரங்கில் 1998 மூன்றாவது ஜெனரேஷன் மற்றும் சென்ற ஆண்டு புது ஜெனரேஷன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஜிப்ஸி, இந்தியாவில் இரண்டாவது ஜெனரேஷனாக 1985 யில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஜிப்ஸி மக்களுக்கு மட்டுமின்றி, ராணுவ பயன்பாடுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆஃப் ரோடுகளுக்கு ஏற்றதாக அமைக்கப்பட்ட இந்த ஜிப்ஸி, ஏடபிள்யூ வசதியுடனும் வருகிறது. 970 சிசி எப்10ஏ நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பெற்றிருந்த ஜிப்ஸி நாளடைவில் 1.3 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பெற்றது. 16 வால்வ் யூனிட்டில் 6000 rpm யில் 80 bhp பெறுகிறது இந்த கார். மேலும் 4500 rpm யில் 103 Nm உட்ச டார்க்கை வெளியிடுகிறது ஜிப்ஸி. இதன் விலை 6.22 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

maruti gypsy

இந்திய இராணுவத்திலும் ஜிப்ஸி காரை அதிகம் பார்கலாம்

0 Comments

மாருதி நிறுவனம் அறிமுகம் செய்த மூன்றாவது கார் இதுவாகும். 800 மற்றும் ஆம்னி காருகளுக்குப் பின் மாருதி நிறுவனம் அறிமுகம் செய்தது ஜிப்ஸியைத்தான்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.